வெயிலை சமாளிக்க சாப்பிடும் வெள்ளரிப்பழத்தில் இவ்வளவு நன்மைகளா ?
வெயிலை சமாளிக்க சாப்பிடும் வெள்ளரிப்பழத்தில் இவ்வளவு நன்மைகளா ? கோடை காலத்தில் வெள்ளரிப்பழமும் விளைச்சலில் இருக்கும். வெள்ளரிப்பழம் கோடை காலங்களில் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. வெள்ளரிப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் சத்துக்களும் வைட்டமின்கள் பி 1, பி 6 மற்றும் கே, ஃபோலேட், காப்பர், மெக்னீசியம் மற்றும் உணவு நார்சத்துகளும் உள்ளன.
வெள்ளரிப் பழம் மாவு போலவும் முலாம்பழத்தைப் போன்றும் சுவை இருக்கும். சுவைக்காக வெள்ளரி பழத்தில் நாட்டுச் சர்க்கரை சேர்த்தும் சாப்பிடலாம். நீர்ச்சத்து அதிகம் உள்ள வெள்ளரிப்பழத்தை கோடை காலங்களில் உண்ணலாம். வெள்ளரிப் பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும். வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்து இருப்பதால், கண் பார்வையை மேம்படுத்தவும், கண் புரை போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கவும் வெள்ளரி பழம் உதவுகிறது.
வெள்ளரிப்பழம் எடை குறைப்புக்கு நல்ல பலன் தருகிறது. இந்த பழத்தில் மிக குறைந்த அளவே கொழுப்பு சத்து இருப்பதால் எடை குறைப்பில் இது பெரும் பங்கு வகிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின்களும் மினரல்களும் உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. பொதுவாக பருவ காலங்களில் விளையும் காய்கறியையும், பழங்களையும் உண்பது சால சிறந்தது இயற்கை உணவுகளை உணவாகவும் அந்த உணவே மருந்தாகவும் மானுட சமூகத்துக்கு இருக்கும்.
விஜயகுமார்,
யோகா ஆசிரியர்,
திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை