தமிழக மத்திய சிறைத்துறை நிர்வாகத்தின் அனுமதியுடன் மகளிர் சிறைவாசிகளுக்கென, பல்வேறுபட்ட கைத்தொழில் மேம்பாட்டுப் பயிற்சிகளை ஆர்வமுடன் வழங்கி வருகிறது விஜயகீதம் அறக்கட்டளை எனும் தொண்டு நிறுவனம். ரெட் ஹில்ஸ் எனப்படும் சென்னை செங்குன்றம் பகுதியில் இயங்கி வருகிறது அந்தத் தொண்டு நிறுவனம்.
இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK
அதன் நிறுவனராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் இணைந்து செயல்பட்டு வருகிறார் கீதா ஓம்சரவணன். அடிப்படையில் அவர், தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றின் பேராசிரியர். அவருக்கு எப்படி நேர்ந்தது மகளிர் சிறைவாசிகள் மீதான வாழ்வியல் அக்கறையும் அன்பும்?
விஜயகீதம் அறக்கட்டளை
Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited
“என் அப்பா விஜயன். 2020-இல் கொரோனா காலத்தில் இறந்து விட்டார். அவர் வாழ்ந்த காலத் தில் யாருக்கு என்ன உதவி என்றாலும் முகம் கோணாமல் செய்து வாழ்ந்தவர். அவர் இறந்த பின்னர் எனக்கு மனமே சரியில்லை. அவர் நினைவாக அவரது பெயரில் விஜயகீதம் அறக்கட்டளை அதன் பின்னர் தான் தொடங்கப் பெற்றது. சரி. யாருக்கு என்ன உதவி செய்யலாம் என்று யோசித்த போது தான், தமிழக மத்திய சிறைகளில் தங்களுக்கான தண்டனைக் காலங்களைக் கழித்துக் கொண்டிருக்கும் பெண்கள் நினைவுக்கு வந்தனர்.
தண்டனைக் காலங்களிலும் சரி, அதன் பின்னர் வெளி உலகுக்கு திரும்பி வந்தாலும் சரி, அவர்களுக்காக உதவிட யாருமில்லை என்பதனை என்னால் உணர முடிந்தது. அதனால், மகளிர் மத்திய சிறைவாசிகளின் மறுவாழ்வு நோக்கிய பயணத்தைத் தொடங்கியது எங்களின் விஜயகீதம் அறக் கட்டளை எனும் தொண்டு நிறுவனம்.” எனக் கூறுகிறார் கீதா ஓம்சரவணன்.
விஜயகீதம் அறக்கட்டளை
“மகளிர் சிறைவாசிகளுக்கென இதுவரை என்னென்ன கைத்தொழில் பயிற்சிகள் கற்றுத் தந்துள்ளீர்கள்?” எனக் கேட்டிருந்தோம். வரிசையாகக் கூறத் தொடங்கியிருந்தார் கீதா ஓம்சரவணன். சென்னை புழல் மகளிர் சிறையில் தண்டனைக் காலத்தில் இருக்கும் சிறைவாசிகளுக்கென எம்பிராய்டரி, ஆரி வொர்க், அழகுக் கலை எனக் கற்றுத் தந்தோம். அவர்களில் பலரும் மிகுந்த ஆர்வமுடன் கற்றுக் கொண்டார்கள்.
2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க
70 மகளிர் சிறை வாசிகளுக்கு எம்பிராய்டரி, ஆரி வொர்க் முழுமையாக கற்றுத் தந்தோம். 80 மகளிர் சிறைவாசிகளுக்கு அழகுக் கலைப் பயிற்சிகள் கற்றுத் தந்தோம். விஐடி கல்லூரி உதவியுடன் மகளிர் சிறைவாசிகளுக்குக் கட்டில் ஒயர் பின்னுதல், பிளாஸ்டிக் ஒயர் கூடை பின்னுதல், சேர் ஒயர் பின்னுதல், மெழுகுவர்த்தி தயாரித்தல் போன்ற வைகளைக் கற்றுத் தந்துள்ளோம். புரசைவாக்கம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் 50 பையன்களுக்கு ஓவியப் பயிற்சியும், 50 சிறுமியர்க்கு மெகந்தி வரைதல் பயிற்சியும் தந்துள்ளோம்.
விஜயகீதம் அறக்கட்டளை
வேலூர் சிறப்பு மகளிர் சிறை. அங்குள்ள சிறைவாசிகளுக்கு சென்னை தாட்கோ கந்தசாமி ஐ.ஏ.எஸ்., அவர்களின் வழி காட்டுதலுடன் நாற்பது சிறைவாசிகளுக்கு அழகுக் கலைப் பயிற்சிகள் நிறைவாகத் தந்துள்ளோம். அவர்களுக்குப் பயிற்சிகள் தந்து விட்டால் மட்டும் போதுமா? சிறை வளாகத்தின் அவுட்போஸ்ட்டில், அவர்களுக்கென ஒரு அழகுக் கலை நிலையம் திறந்து வைக்கப் பட்டுள்ளது. வேலூர் நகரப் பெண்கள் அந்த அழகுக் கலை நிலையத்துக்கு வந்திருந்து தங்களை அழகுபடுத்திச் செல்கின்றனர். அந்த அழகுக் கலை நிலையம் எப்போதும் தொடர்ந்து சிறைத்துறைக் காவலர்களின் கண்காணிப்பிலும் கட்டுப்பாட்டிலும் இருந்து வருகிறது.
இதில் இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா? வேலூர் சிறப்பு மகளிர் சிறையில் அழகுக் கலை பயிற்சி பெற்றவர்களில், தண்டனைக் காலம் முடிந்து வெளியே வந்திருந்த பெண்களில் சிலருக்கு, கிரீன் டிரெண்ட்ஸ் நிறுவனத்தில் அழகுக் கலை மேக்கப் விமன்களாகப் பணியில் அமர்த்தியுள்ளார் வேலூர் கோட்டை ரோட்டரி கிளப்பின் கே. விஜயகுமார். அந்தப் பெண்கள் இப்போது நிரந்தர மாத ஊதியம் பெற்று வருகின்றனர். வேலூர் சிறப்பு பெண்கள் சிறையில் 25 முதல் 40 வரையிலான வயதுள்ள சிறைவாசிகளில் 28 பெண்களுக்கு, இரண்டு மாதங்களில் எம்பிராய்டரி டிசைனிங் கற்றுத் தந்து விட்டோம். அவர்களுக்கான வேலைகளுக்காக வெளியே இருந்து நாங்களே ஆர்டர்கள் பெற்றுக் கொண்டு வந்து தருகிறோம்.
அவர்களின் உழைப்புக்கான வருவாயினை, அவரவர்கள் பெயரிலேயே சிறை நிர்வாகம் சேமித்துப் பராமரித்து வருகிறது. பொதுவாகவே மகளிர் சிறைகளில் கைத்திறன் கைத்தொழில் பயிற்சிகள் கற்றுத் தருவதுடன், எங்கள் பணிகளை நாங்கள் நிறுத்திக் கொள்வதில்லை. தண்டனைக் காலம் முடிந்து வெளியே செல்லும் அவர்களுக்கான வருவாய் ஈட்டுதல், வேலை வாய்ப்பிலும் அக்கறை செலுத்தி அவர்களுக்கென உதவி வருகிறோம்.
ஒருங்கினைப்பாளர் கீதா ஓம்சரவணன்.
தண்டனைக் காலம் அனுபவிக்கும் சிறைவாசிகளுக்கு, சிறைக்குள் இருந்தபடியே அவர்கள் வேலை செய்திட வெளியே இருந்து ஆர்டர்களும் பெற்றுத் தந்து அவர்களுக்கான வருவாய்ப் பெருக்கத்துக்கும் வழி காட்டுகிறோம். தமிழக மத்திய சிறைத்துறையின் ஒத்துழைப் புடனும் சீரிய வழிகாட்டுதலுடனும், எங்களின் தொடர் சேவை ஓட்டமானது தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கிறது. எங்களுக்கும் மிகப் பெரிய ஆத்ம திருப்தி. மகளிர் சிறைவாசிகளிடையே மலரும் மறுவாழ்வு, மலர்ந்து கொண்டே இருக்கட்டும்.” என்கிறார் சென்னை செங்குன்றம், விஜயகீதம் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் ஒருங்கினைப்பாளர் கீதா ஓம்சரவணன்.
– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு
திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending