ஏய்யா உனக்கு கொலைவெறி பொளந்து கட்டிய ரசிகர்கள்! ஜில்லுன்னு சினிமா…

0

ஏய்யா உனக்கு கொலைவெறி பொளந்து கட்டிய ரசிகர்கள்! ஜில்லுன்னு சினிமா…

ஏய்யா உனக்கு கொலைவெறி பொளந்து கட்டிய ரசிகர்கள்!

https://businesstrichy.com/the-royal-mahal/

மிக்ஜாம் புயலால் செனையே சின்னா பின்னமான போது, நடிகர் விஷாலோ தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் சென்னையின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி நிர்வாகம் இவற்றுக்கு எதிராகவும் அரைவேக்காட்டுத் தனமாக சோஷியல் மீடியாவில் உளறிக் கொட்டினார். உடனே இதற்குப் பதிலடி கொடுத்தார் சென்னை மேயர் பிரியா.

“ஏ.சி. ரூம்ல உட்கார்ந்துக்கிட்டு சினிமா வசனம் மாதிரி பேசக் கூடாது. வீட்டுக்கு வெளியே வந்து பாரு. அப்பதான் நிலவரம் தெரியும், உனக்கு என்ன கோரிக்கைன்னு மட்டும் சொல்லு” என ‘பஞ்ச்’ விட்டதில் மூக்குடைபட்ட விஷால் தனது ரசிகர் மன்றத் தலைவர் ஹரி மூலம் சில இடங்களில் மட்டும் பிரெட் பால்பாக்கெட்டை சப்ளை பண்ணிவிட்டு கப் சிப்பாகி விட்டார்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

நடிகர் விஷால்
நடிகர் விஷால்

“இதெல்லாமே சினிமா புரமோஷன் பித்து தாங்க, ஹரி டைரக்ஷன்ல ரத்னம் என்ற படத்தில் நடிச்சுக்கிட்டிருக்கார் விஷால். அந்தப் படத்தின் போஸ்டர்ல இடது கையில் ஒரு தலை, வலது கையில் ரத்தம் சொட்டும் அரிவாளுடன் விஷால் இருப்பார். கடந்த வாரம் இந்தப் போஸ்டர் ரிலீசானதும் ” ஏய்யா உனக்கு கொலைவெறி”ன்னு சோஷியல் மீடியாவில் பொளந்து கட்டிவிட்டார்கள்.

அதை பேலன்ஸ் பண்ணத்தான் இப்படியெல்லாம் உளறிக்கிட்டிருக்காரு விஷால். ஏப்ரல் மாசம் ரிலீசாகப் போற ‘ரத்னம்’ படத்துக்கு இப்பவே புரமோஷன் பண்ணுணாத் தானே கரெக்டா இருக்கும். நான் சொல்றது கரெக்ட்தானே” என்றார் பிரபல தயாரிப்பாளர் ஒருவர்.

அசரவைக்கும் ஆண்ட்ரியா!

திருச்சியை சேர்ந்த வினியோகஸ்தர் முருகானந்தம் ராக்ஃபோர்ட் எண்டெர் டெயின்மெண்ட் என்ற சினிமாக் கம்பெனியைத் திறந்தார். அதர்வாவை வைத்து “குருதி ஆட்டம்” என்ற படத்தை எடுத்தார். குப்புற விழுந்தார். ‘பிசாசு – 2’ மூலம் டைரக்டர் மிஷ்கினிடம் சிக்கினார். ஆண்ட்ரியா தான் ஹீரோயின். ஆறு மாதங்கள் ஷுட்டிங் நடத்திய பின், ‘பிசாசு -2’வில் விஜய் சேதுபதியை கமிட் பண்ணினார் மிஷ்கின்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஆண்ட்ரியாவின் முழுநிர்வாண சீன்கள் உட்பட ஏகப்பட்ட சீன்களை ஷுட் பண்ணினார். “இந்தா…  அந்தா…” என ஒன்றரை வருடத்தில் ஷுட்டிங்கை முடித்தார் மிஷ்கின். முழிபிதுங்கிப் போனார் முருகானந்தம். பல முறை ரிலீஸ் தேதியை அறிவித்து தள்ளித் தள்ளிப் போய்க் கொண்டே இருப்பதால் நாக்குத் தள்ளிப் போய்க் கிடக்கார் முருகானந்தம்.

 

ஆண்ரியா - அனிருத்
ஆண்ரியா – அனிருத்

நிலைமை இப்படி கவலைக் கிடமாக இருக்க, ‘பிசாசு-2’ ஷுட்டிங் நடந்து கொண்டிருப்பதாக மிஷ்கின் தரப்பிலிருந்தே நியூஸைக் கசியவிட்டு, முருகானந்தத்தை மேலும் கவலைக்கிட மாக்கிவிட்டார்கள். இந்த நியூஸ் ரிலீசான மறுநாள் தான் கலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி – மிஷ்கின் இணையும் ‘ட்ரெய்ன்’ படத்தின் பூஜை நடந்தது. இதான் ‘மிஷ்கின் மிராக்கிள்’  ஆனால் கலைப்புலியிடம்  செல்லுபடியாகாது இந்த ‘மிராக்கிள்’

வெற்றிமாறன் தயாரிப்பில் ‘அறம்’ கோபிநைனார்  டைரக்ஷனில் நடித்துள்ள ‘மனுஷி’ படம் ஓடிடியில் ரிலீசாகி தனக்கு ஓஹோவென பேர் வாங்கித் தரும் என்று நம்பிக்கையில் இருக்கிறார் ஆண்ட்ரியா. இது மட்டும் பத்தாது என நினைத்த ஆண்ட்ரியா, ‘பெண் பித்தன்’ அனிருத், தன்னிடம் எந்த மாதிரியெல்லாம் பித்துப் பிடித்து கிடந்தான் என்பதை சில சோஷியல் மீடியா ‘பார்ட்டிகள்’ மூலம் ‘லீக்’ பண்ணி கோலிவுட்டையே அசரடிக்கிறார் ஆண்ட்ரியா.

இது பார்த்திபன்  ‘ஸ்டைல்’ பஞ்ச்

மிக்ஜாம் புயலால் டோட்டல் ஜாம் ஆகிப் போனது சென்னையின் முக்கால்வாசி ஏரியாக்கள். இதில் சைதாப் பேட்டை உட்பட சில பகுதிகளுக்குச் சென்று பசியால் வாடிய மக்களுக்கு உதவினார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். “சந்திரனுக்கு சந்திராயனும் செவ்வாய்க்கு செங்கல்வராயனும் அனுப்ப பல ஆயிரம் கோடி செலவழிக்கிறோம்.

பார்த்திபன்
பார்த்திபன்

ஆனால் ஒரு பிளாஸ்டிக் படகை எடுத்துக் கொண்டு [வேளச்] ஏரிக்குள் போக முடியல. அதிவேக புல்லட்ரயில், அதிநவீன தொழில் நுட்ப முன்னேற்றம். இப்படிப்பட்ட இந்தியப் பெருமையில் எருமை Urine போக”  என தனது ஸ்டைலில் ‘பஞ்ச்’ அறிக்கை விட்டார் பார்த்திபன்.

-மதுரை மாறன்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.