மதன் வீடியோ-ஆடியோ ஆதாரத்தை கைப்பற்றிய ஆளும்கட்சி ; பாஜகவின் அடுத்த வியூகம் !
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் மதன் ரவிச்சந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலியல் குற்றச்சாட்டு சம்மந்தமான கே.டி.ராகவன் பற்றிய வீடியோ ஆதாரங்களை வெளியிட்டார். மேலும் அந்த வீடியோ ஆதாரங்களை வெளியிட சொன்னதே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான் என்று குறிப்பிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து மதன் ரவிச்சந்திரன் மற்றும் அவருக்கு உதவிய அவருடைய தோழி ஆகியவை இருவரும் பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.


இதையடுத்து அண்ணாமலையுடன்- மதன் ரவிச்சந்திரன் பேசிய ஆடியோவை ரிலீஸ் செய்தார். அதேசமயம் இதுபோல் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 15 தலைவர்கள் பற்றிய ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆளும் கட்சி – மதன் ரவிச்சந்திரனிடம் இருக்கக் கூடிய ஆதாரங்களை தற்போது கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதை வைத்து பாஜக வைக்கக் கூடிய சக்திகளை முறியடிக்கும் பிளானும் தமிழ் நாட்டின் ஆளும் தரப்புக்கு உள்ளதாக கூறப்படுகிறது.
அதேசமயம் பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை மீது கோபத்தில் உள்ளதாம். கிடைத்த ஆதாரத்தை தக்கவைத்துக்கொள்ள தெரியாமல், பிரச்சினை இந்த அளவுக்கு பூதாகரமாக வெடிக்க வைத்ததற்கு முக்கிய காரணமே தமிழக பாஜக தலைவர் தான் என்று கமலாலய வட்டாரங்கள் டெல்லி தலைமை கூற, டெல்லி தலைமை தற்போது தமிழக பாஜக தலைவர் மீது கோபத்தில் உள்ளதாம்.

இதனால் தமிழக பாஜகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் தமிழக பாஜக தலைவரை மாற்ற பரிந்துரை செய்திருக்கிறார்களாம். அதேசமயம் அண்ணாமலை மாநிலத் தலைவராக ஆக்கப்பட்டு ஒரு சில வாரங்களே ஆகும் நிலையில் மாற்றுவதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது, அதை சமாளிக்கும் பொருட்டு தமிழ்நாட்டின் பாஜக தலைவராக ஒரு பெண்ணை அறிவியுங்கள் என்று ஆலோசனை வழங்கியிருக்கிறதாம் தமிழக பாஜகவின் சில முக்கிய நிர்வாகிகள் கொண்ட குழு, இதை யோசிக்கத் தொடங்கிய டெல்லி பாஜக தமிழக பாஜக தலைவராக ஒரு பெண்ணை தற்போது நியமித்தால் அது பெண்கள் மத்தியில் பாஜக வின் மதிப்பு அதிகரிக்கும், மேலும் தற்போது எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கும் அதுவே தீர்வாக அமையும்…… அதுவும் ஒரு சிறுபான்மையின பெண்ணாக இருந்தால் நல்லா இருக்கும் என்ற அடிப்படையில் குஷ்புவுக்கு வாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டிருக்கிறதாம்.