மன்னிப்பு கேட்ட திருச்சி ரவுடி சர்ச்சை சாமியார் வீடியோ..

0

மன்னிப்பு கேட்ட திருச்சி ரவுடி சர்ச்சை சாமியார் வீடியோ..

திருச்சியில் சமீபத்தில் போலி சாமியார் ஒருவர் பிரபல ரவுடிகளின் பெயர்களைக் கூறி டீலிங் பேசிய ஆடியோ சமூகவலைத்தளங்களில் பரவியது.

அதன் மூலம் திருச்சி பொன்மலை காவல் நிலையத்தில் பிரபல ரவுடி ஜெய் என்கிற கொட்டப்பட்டு ஜெய்
நீதிமன்றம் சென்று சாட்சி சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

மேலும் எனக்கு காவல்துறையினர் மற்றும் அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ள அல்லித்துறை சாமியார் பாலசுப்பிரமணியம் மற்றும் வழக்கறிஞர் கார்த்தி ஆகியோரிடம் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும்,

அல்லித்துறை சாமியார் பாலசுப்பிரமணியனுக்கு எல்லா இடத்திலும் நெருங்கிய தொடர்பு இருப்பதால்,

என்னை என்கவுன்டர் லிஸ்டிலிருந்து பெயரை நீக்குவதாகவும்,

வழக்குகளை முடித்து கொடுப்பதாகவும், என்னை எதிர்த்து யாரும் சாட்சி சொல்லும்பட்சத்தில் அவர்களை கொலை செய்துவிடு என்று அல்லித்துறை சாமியார் கூறி கொட்டப்பட்டு ஜெய் சாட்சியங்களை மிரட்டி வருகிறார்.

ஆகவே ரவுடி ஜெய் என்கிற கொட்டப்பட்டு ஜெய்,

அல்லித்துறை சாமியார் பாலசுப்பிரமணியம் மற்றும் வழக்கறிஞர் கார்த்திக் ஆகியோர் தொடர்பினை வைத்துக்கொண்டு அரசியல்துறை மற்றும் காவல்துறையினரிடம் செல்வாக்கு உள்ளதுபோல் உரையாடியது, கொலை மிரட்டல் விடுத்ததாக பொன்மலை காவல்நிலைய வழக்கு பதிவு செய்யப்பட்டு.

போலி சாமியார் தேஜஸ் என்ற பாலசுப்பிரமணியம் தன்னை அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக காண்பித்து பொது மக்களை ஏமாற்றிவந்த போலி சாமியார் தேஜஸ் என்ற பாலசுப்பிரமணியம்,

60 வழக்குகளில் தேடப்பட்டுவந்தப்பட்ட ரவுடி கொட்டப்பட்டு ஜெய் அவரது வழக்கறிஞர் கார்த்திக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் தொடர் குற்ற செயலில் ஈடுபட்ட கொட்டப்பட்டு ஜெய் மீது குண்டாஸ் போடப்பட்டது.

மேலும் போலி சாமியார் தேஜாஸ் சுவாமிகள் மற்றும் வழக்கறிஞர் கார்த்திக்கு திருச்சி நீதிமன்றம் பலமுறை பிணை வழங்க மறுத்த நிலையில்,

அதன் பின்பு திருச்சி நீதிமன்றமே நேரடியாக வழக்கறிஞர் கார்த்திக்கு மட்டும் பிணை வழங்கி வெளியே விட்டது.

மூன்று முறை பிணை மறுக்கப்பட்டு உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்து அதன்பின்பு தேஜாஸ் சுவாமியான அல்லித்துறை பாலசுப்பிரமணியனக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் பிணை கிடைத்துள்ளது.

 

இந்நிலையில் பிணையில் வெளியே வந்த அல்லித்துறை சாமியார் தான் இனிமேல் எந்த ரவுடிகளிடமும், தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டேன் என்றும் மீண்டும் ஆன்மீக பயணத்தை மேற்கொள்ளப் போவதாக கூறி மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்று வெளியே கசிந்துள்ளது.

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு படிக்கிறது.

இந்தர்ஜித்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.