ஹெலிகாப்டர் சகோதரர்களிடம் லஞ்சம் பெற்ற விவகாரம்: ‘தூக்கியடிக்கப்பட்ட’ தனிப்படை எஸ்.ஐ.!

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

நிதி நிறுவன மோசடி தொடர்பாக கும்பகோணத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க அப்போதைய தஞ்சை மாவட்ட எஸ்.பி. ரூ.10 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து இச்சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

குற்றச்சாட்டுக்குள்ளான ஐபிஎஸ் அதிகாரி தேஷ்முக்இ தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆகிய இரண்டு பேர் அடுத்தடுத்து திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில்இ எஸ்.பி.யின் தனிப்படையை (ஸ்பெஷல் டீம்) சேர்ந்த ‘க்ரைம்’ கண்ணன் என்றழைக்கப்படும் உதவி ஆய்வாளர் கண்ணன் தற்போது திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க


ஹெலிகாப்டர் சகோதரர்கள் எனப்படும் கும்பகோணம் ஸ்ரீநகரைச் சேர்ந்த எம்.ஆர்.கணேஷ்இ எம்.ஆர்.ஸ்வாமிநாதன் ஆகியோர் தன்னிடம் கடனாக வாங்கிய ரூ.2.5 கோடியை திருப்பித் தராமல் ஏமாற்றியதுடன்இ பணத்தை திருப்பிக்கேட்ட தன்னை அடியாட்களை வைத்து மிரட்டியதாகவும் அதே பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் ரகு பிரசாத் என்ற 27 வயது இளைஞர் மார்ச் 13-ம் தேதி அப்போதைய எஸ்.பி. தேஷ்முக் சேகர் சஞ்சயிடம் புகார் மனு அளித்துள்ளார்

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

ஆனால்இ அப்புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காததோடு அதை கிடப்பில் போட்டதோடுஇ ‘இடைத்தரகர்’ மூலம் ஹெலிகாப்டர் சகோதரர்களிடம் பேரம்பேசி அவர்களை கைது செய்யாமல் இருக்க ரூ.10 லட்சம் லஞ்சம் பெற்றதாகஇ அதன்பின்னர் வேறொரு புகாரில் கைது செய்யப்பட்ட எம்.ஆர்.கணேஷ் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார். இது அகில இந்திய அளவில் மீடியாக்களில் தலைப்புச் செய்தியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து குற்றச்சாட்டுக்குள்ளான ஐபிஎஸ் அதிகாரி தேஷ்முக் சேகர் சஞ்சய் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பணியிட மாறுதல் செய்யப்பட்டு ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்ட ஒரே வாரத்தில் மீண்டும் பணியிட மாறுதல் செய்யப்ப்டு மதுரையில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டன்ட் ஆக மிகவும் ‘டம்மியான’ பதவியில் நியமிக்கப்பட்டார்.

3


அதேபோலஇ தஞ்சை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் தனிப்பிரிவு (ஸ்பெஷல் பிராஞ்ச்) இன்ஸ்பெக்டராக பணிபுரிந்துவந்த சோமசுந்தரம் நாகப்பட்டினம் மாவட்டம் கீவளுர் காவல் நிலையத்திற்கு தூக்கியடிக்கப்பட்டார்.

இந்நிலையில் அப்போதைய எஸ்.பி. தேஷ்முக் சேகர் சஞ்சய் ஹெலிகாப்டர் சகோதரர்களிடம் பணம் பெற்ற சம்பவத்தில் ஆரம்பத்தில் தனிப்படை எஸ்ஐ ‘க்ரைம’; கண்ணன் மூலமே அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை உயரதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

4

இதைத் தொடர்ந்து ‘க்ரைம்’ கண்ணன் என்றழைக்கப்படும் தனிப்படை உதவி ஆய்வாளர் கண்ணன் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.