அங்குசம் சேனலில் இணைய

விஜய் ரசிகர்களும் – முந்தய தலைமுறை நடிகர்களின் ரசிகர்களும் !

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விஜய் ரசிகர்களின் மனநிலை மற்றும் அவர்களின் சமூக ஒழுங்கு ஏன் இப்படி இழிவாகவும் குரூரமாகவும் இருக்கிறது ? என யோசித்து கொண்டிருந்தேன்.. இதற்கு முந்தய தலைமுறை நடிகர்களின் ரசிகர்கள் ரசிகர் மன்ற பலகைகளை 2000 களின் துவக்கம் வரை எல்லா ஊர்களிலும் கண்டிருக்கிறேன்.. ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியோருக்கு பெரும்பாலும் எல்லா கிராமங்களிலும் மன்றங்களின் பெயர் பலகைகள் இருக்கும். பிரபு, கார்த்திக், ராமராஜன், சத்யராஜ், போன்றவர்களுக்கும் பரவலாக இருக்கும்.

ஆச்சர்யகரமான இன்னொரு உண்மை இவர்களுக்கு சமமாக ராஜேந்தருக்கு பரவலாக இருக்கும். T.R ரசிகர்களின் அடையாளம் எல்லோரும் தாடி வைத்திருப்பார்கள். சிலர் அவர் போலவே நெற்றியை மூடும் அளவு முடியும் வைத்திருப்பார்கள்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அவர்களும் இது போலவே முதல்நாள் முதல் காட்சிக்கு முண்டியடித்து டிக்கெட் வாங்குவது, திரையில் நாயகர்களை காணும்போது விசிலடிப்பது, லாட்டரி டிக்கெட் வீசுவது, தியேட்டருக்கு வெளியே தோரணம் கட்டுவது கட்அவுட் களுக்கு பாலபிஷேகம் செய்வது என எல்லாம் செய்தவர்கள்தான்.. டீக்கடையில் எல்லாம் தங்கள் நாயகர்களின் பிரதாபங்களை பேசி வாதிடுபவர்கள்தான்..

TVK என்பது கட்சியல்ல
TVK என்பது கட்சியல்ல

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

ஆனாலும் வாழ்க்கை தேவைகளுக்கு ஏதேனும் வேலை, சிறிய தொழில், என மற்ற நாட்களில் ஓடிக்கொண்டே இருக்கும் சூழல் அமைந்தவர்கள்.. அதன் பொருட்டு சமூகத்திற்கு  அன்றாடம் முகம் கொடுக்க வேண்டியவர்கள். இன்னொரு புறம் நற்பணி மன்றம் என பெயர் பலகை வைத்துள்ளதற்கு குறைந்த பட்ச நியாயம் செய்ய சிறு சிறு சமூக பணிகளை தங்களின் நாயகர்களின் பிறந்தநாள், சுதந்திர தினம், குடியரசு தினம், போன்றவற்றில் செய்வார்கள்..

பெரும்பாலும் பள்ளிக்குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா பென்சில் வழங்குவது, மரக்கன்றுகள் நடுவது, முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களில் அரசு மருத்துவமனைகளில் உணவு வழங்குவது போன்ற சிறு பணிகள்தான்.. அப்போதும் மற்றவர்களை விட முற்போக்காக சிந்திப்பவர்கள் என் கருதிக்கொள்ளும் கமல் ரசிகர்கள் இரத்ததான முகாம்களை நடத்துவார்கள்.. அதன் பொருட்டு அவர்களுக்கு உள்ளூர் அளவில் சிறு சமூக மதிப்பு ஏற்படும்.. இவர்களும் தாங்கள் கவனிக்க படுகிறோம் என்ற கவனம் கொண்டிருப்பார்கள்.. அவர்களின் தனி அடையாளமும், சமூக அடையாளமும் வெளிப்படையானவை..

அதன் காரணமாக திரையரங்க வளாகத்திற்கு வெளியே தங்கள் குடிமை பண்பை ( civic sence)தவற விடமாட்டார்கள். உள்ளூர் அளவில் அவர்கள் செய்யும் சிறு நற்பணிகள் காரணமாக பள்ளி ஆசிரியர்கள், காவல் துறையினர், போன்ற பொது ஊழியர்களிடம் பரிச்சயம் இருக்கும்.. சிறு சச்சரவுகள் ஏற்படும்போது சமரசம் செய்வது போன்றவற்றிக்கு காவல் நிலையங்களுக்கும் செல்வார்கள்.. பெரும் படிப்பாளிகள் அல்ல என்றாலும் அரசு இயந்திரம், சட்ட அமலாக்க அமைப்புகள் எப்படி இயங்கும் என்கிற நடைமுறை புரிதல் இருக்கும்..

விஜய் தனது சமூக ஊடக பரிவாரங்களை virtual warrior (மெய்நிகர் வீரர்கள்) என புளகாங்கிதம் அடைந்தார். ஆனால் உண்மையில் இவர்கள் virtual species (மெய்நிகர்வாழிகள்) .

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

விஜய் - கரூர்
விஜய் – கரூர்

மெய்நிகர் உலகிற்கு வெளியே நடைமுறை அறிவு அற்ற கூட்டம்.. கூடவே தங்களுக்கு என குறைந்த பட்ச சமூக மதிப்பற்ற உதிரிகள். கும்பலாக சூரர்களாகவும் உதிரியாக தொடை நடுங்கிகளாகவும் இருப்பவர்கள்.. அதிலும் குடிமை பண்பு, அரசு மற்றும் காவல் அமைப்புகளின் இயல்புகள் பற்றி எதுவும் தெரியாதவர்கள்..

அதனால்தான் கேவலமான மெய்நிகர் நடத்தையை வெளிப்படுத்துகிறார்கள். நீதியரசர் அருணா ஜெகதீசன் பற்றிய செய்தியில்  நீ யாருடி தேவ்…. யா.. என ஒருவன் பின்னூடமிடுகிறான்.

உண்மையாகவே அவனுக்கு அவர் யார் என்றோ அவரின் அதிகாரங்கள் என்னவென்றோ தெரியாது. விஜய் இந்திய பிரதமரை விடவும் ஏன் அமெரிக்க அதிபரை விடவும் பெரிய ஆள் என நம்புகிறான்..

விஜயின் அரசியல் வருகைக்கு பின் தெருவிற்கு வரும் இவர்கள் மெய்நிகர் மனநிலையில் கும்பல் மனோபாவத்துடன் அனைத்து சமூக நெறிகளுக்கும், சட்ட அமலாக்க அமைப்புகளுக்கும் சவால் விடுகின்றனர். இவர்களை எப்படி அணுகுவது என அமைப்பு தடுமாறுகிறது..

என்ன தீர்வு என்றால் நிச்சயம் அரசியல் பயிற்றுவிப்பதோ, உளவியல் உதவிகளை அளிப்பதோ அல்ல.. கும்பலாக இவர்களை கையாள நிர்வாகத்தின் இரும்புக்கரமும், சமரசமற்ற சட்ட நடவடிக்கைகளுமே உடனடித்தேவை.

இன்னொரு விஷயமும் கூட.. ஆட்சி தலைவர்கள்  மணிக்கணக்கில் உட்கார்ந்து கொண்டு நடிகர்களின் சொரிந்து கொடுக்கும் பு(ழு)கழுரைகளுக்கு காதுகளை வாகாக கொடுக்காமல் தவிர்ப்பது..

இந்த விஷயங்களில் நான் எப்போதும் நிராகரிக்கும் ஜெயலலிதாவின் ஆதரவாளன்.

Muruganantham Ramasamy 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.