விஜய் செய்வது தவறு மட்டும் அல்ல அரசியல் சறுக்கல் !
ஈரோடு கிழக்கு தேர்தல் நடிகர் விஜய் அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு எப்படி எம்ஜிஆருக்கு திண்டுக்கல் இடைத்தேர்தல் வந்து மாயத் தேவர் வெற்றி பெற்று கட்சி சின்னத்தை கைப்பற்றினாரோ அது போல ஒரு நல்ல வாய்ப்பு ஆனால் தவற விடுகிறார் விஜய் அதிமுக போட்டியில் இல்லை பிஜேபியும் போட்டியில் இல்லை.
சீமான் போட்டியில் இருக்கிறார். நிச்சயம் சீமானுக்கு அதிமுக வாக்குகள் அதிகம் போகாது. ஒன்று வாக்களிக்க அதிமுகவினர் அதிகம் செல்ல மாட்டார்கள். அவர்கள் சீமானை முன்னணிக்கு கொண்டு வர விரும்ப மாட்டார்கள். அதே சமயம் பிஜேபி சீமானுக்கு மறைமுக ஆதரவு தருவார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அதற்குக் காரணம் கடந்த 10 தினமாக சீமான் எடுக்கும் பெரியார் எதிர்ப்பு அஸ்திரம் பிஜேபிக்கு உகந்த நிலைப்பாடு அதில் எச்.ராஜா மற்றும் குருமூர்த்தி போன்றவர்கள் வெளிப்படையாகவே ஒத்துக் கொண்டார்கள். அதிமுகவை பொருத்தவரையில் பெரியாரை விட்டு விட்டு அரசியல் செய்ய முடியாது.
விஜய் பேசும் அரசியல் அதிமுகவுக்கு ஏற்புடையது விஜய் அவர்களோடு கூட்டணி வைக்கவும் அதிமுக தயாராக உள்ளது எனவே தமிழக வெற்றிக் கழகம் களத்தில் இருந்தால் அதிமுக ஆதரிக்கும்.
அதுபோல தன்னுடைய பலத்தை சோதிக்க விஜய் அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஆனால் நழுவ விடுகிறார்.
இப்போது உள்ள சூழலில் திமுகவுக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள் பிஜேபிக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள் தேர்வு செய்யும் ஒரு நல்ல வாய்ப்பாக விஜய் இருக்க வாய்ப்புண்டு.
இதைத் தவற விடுவது அவருக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என்பதை காட்டுகிறது..அவர் திரைப்படத் துறையில் இந்த நேரத்தில் கவனத்தை குறைத்துக் கொண்டு இந்த ஒரு தேர்தலை முடித்துவிட்டு பிறகு போய் நடிக்கலாம்… தமிழக வெற்றிக்கழகம் நின்றால் நிச்சயம் இரண்டாம் இடம் பெறலாம். ஓரளவு கட்டுத்தொகையை காப்பாற்றும் வாய்ப்பு இருக்கிறது ஏனென்றால் சீமான் பொதுமக்கள் விரும்பும் ஒரு நபர் அல்ல. அந்த விதத்தில் ஒப்பிட்டு அளவில் விஜய் மக்களுக்கு உவப்பானவர்.
திமுகவை விட்டால் அடுத்த வாய்ப்பு விஜய்க்கு என்று உள்ளதை அவர் பயன்படுத்த தவறுவது அரசியல் வாழ்வில் ஒரு சறுக்கல் மட்டுமல்ல அரசியல் புரியவில்லை என்பதையும் இது காட்டுகிறது.
— ஜெயதேவன் – எழுத்தாளர்.