விஜய்சேதுபதி + பூரி ஜெகன்னாத் கூட்டணியின் ஷூட்டிங் ஸ்டார்ட்டிங்!
தெலுங்கு சினிமாவின் புகழ் பெற்ற இயக்குனர் பூரி ஜெகன்னாத்தின் ‘பூரி கனெக்ட்ஸ் பேனர் மற்றும் ஜே.பி.மோஷன் பிக்சர்ஸ் பேனர் இணைந்து தயாரிக்கும் பான் இந்தியா படத்தின் ஹீரோவாக விஜய் சேதுபதி மூன்று மாதங்களுக்கு முன்பு கமிட்டானார். அதன் பின் ஹீரோயினாக சம்யுக்தா, இன்னொரு வெயிட்டான கேரக்டரில் சீனியர் நடிகை தபு ஆகியோர் அடுத்தடுத்து கமிட்டானார்கள். மற்ற கேரக்டர்களில் நடிப்பவர்கள் தேர்வு ஒருபக்கம், டைட்டில் தேர்வு ஒருபக்கம் நடந்தாலும், பூரி ஜெகன்னாத் திட்டமிட்டபடி ஜூலை.07ஆம் தேதி ஹைதரபாத்தில் போடப்பட்ட பிரம்மாண்ட செட்டில் படத்தின் ஷூட்டிங் ஆரம்பமானது.
விஜய் சேதுபதி-சம்யுக்தா சம்பந்தப்பட்ட காட்சிகள் முதலில் ஆரம்பமானது. ’நான் ஸ்டாப்’பாக ஷூட்டிங்கை நடத்தி 2026 துவக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் பூரி.
— மாறன்