எடப்பாடி பழனிச்சாமி இடத்திற்கு குறிவைக்கும் நடிகர் விஜய் !
எடப்பாடியை குறி வைக்கும் விஜய்!
மாநில அளவிலான கொள்கை விளக்கப் பொதுக் கூட்டத்தை சேலத்தில் நடத்தியிருக்கிறது த.வெ.க. தலைவர் விஜய் தவிர்த்து கட்சியின் மற்ற நிர்வாகிகள் பங்கேற்றனர். சேலம் சந்திரபோஸ் மைதானம் பல அரசியல் கட்சி மாநாடுகளை கண்ட பெருமை கொண்டது. பெரியார் திராவிடர் கழகம் பெயர் மாற்ற மாநாட்டை நடத்தியதும் இதே சேலம் மண்ணில் தான்.
பெரியார் போல நாங்களும் கொள்கை வழி வந்தவர்கள் என்பதை உணர்த்தவே சேலத்தை தேர்ந்தெடுத்தோம் என்கிறார், ஆதவ் அர்ஜூனா.

குர்ஆன் ஆனையாக இனி பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது போன்ற பஞ்ச் டயலாக்குகள் பஞ்சம் இல்லாமல் பறந்தன.
மண்ணின் மைந்தன் என்ற அடையாளத்தோடு மேடையேறிய, விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண்ராஜ் உதிர்த்த “என் மக்களே” என்ற செண்டிமெண்ட் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.
திமுகவை விமர்சிக்கும் அளவுக்கு ஏன் அதிமுக -வை ஏன் எதிர்ப்பதில்லை என்ற கேள்விக்கு அப்படி ஒரு கட்சியே இல்லை என்ற அளவுக்கு அதன் தொண்டர்கள் எல்லாம் எங்களோடு வந்து விட்டார்கள் என ஆதவ் அர்ஜூனா போட்டாரே ஒரு போடு … இன்னும் பல சங்கதிகளை அலசுகிறது அங்குசம் ஆடுகளம்!