அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

விஜய் சொன்ன திருக்குறள் ! அமைச்சரின் பதிலடி !

திருச்சியில் அடகு நகையை விற்க

பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளை முன்னிட்டு  திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.கழக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளுடன் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள காமராஜர் சிலையில் இருந்து மௌன ஊர்வலமாக புறப்பட்டு  சிந்தாமணி பகுதியில் அமைந்துள்ள அண்ணாசிலைக்கு சென்று  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், கே என் சேகரன், சபியுல்லா, மாநில அணி நிர்வாகி செந்தில் பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர,  பகுதி, ஒன்றிய, நகர,  பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக  செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள்  கழக முன்னோடிகள் மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

மௌன ஊர்வலம்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று மௌன ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு அஞ்சலி செலுத்தி உள்ளோம். எங்களது உறுதிமொழியாக 2026 ல் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற கோரிக்கையுடனும்,  கலைஞரின்  ஐம்பெரும் முழக்கங்களையும் இங்கே எழுப்பியிருக்கிறோம்.

இந்த ஆண்டு முதல்வர் கூறியது போல் கருத்து கணிப்புகள் எல்லாம் கடந்து இன்னும் அதிகமான இடங்களில் நாங்கள் வெல்வோம் நாட்டு மக்களுக்காக தொடர்ந்து நாங்கள் உழைப்போம் மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றார்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவை யாவும் திமுக முதற்றே உலகு என நேற்று விஜய் பேசியுள்ளாரே என கேட்டபோது….. அது அவர்களின் கட்சி சார்ந்து ஆண்டு விழாவில் அவர்களின் தோழர்களை உற்சாகப்படுத்துவதற்காக அவர் பேசியது. எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டின் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு விமர்சனங்களை தொடர்ந்து எங்கள் மேல் வைத்து வந்தாலும் தொடர்ந்து நாங்கள் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கிறோம்  என்றால் நாங்கள் வென்றது இடங்களை அல்ல மக்களின் மனங்களை என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். மக்களின் மனங்களை வெல்வதற்காக என்னென்ன பணிகளை செய்ய வேண்டுமோ அந்த பணிகளை நாங்கள் செய்வோம்.

மௌன ஊர்வலம்இந்தியா முழுவதும் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கக்கூடிய நிதி என்பது 41% இருந்து 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். 16ஆவது நிதி குழுவிலாவது அதை சரி செய்யப்படும் என நினைத்தோம் ஆனால் இந்த பட்ஜெட்டிலும் 41 சதவீதமே  தொடர்கிறது என்பது கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது.

குறிப்பாக அந்த 41யும் பிரித்து தரும்பொழுது தமிழ்நாட்டிற்கு வெறும் 4.097 சதவீதம் தான் நாங்கள் கட்டும் வரிப்பணத்திற்கு திருப்பி தரப்படுகிறது என்றால் திட்டங்களை எப்படி எங்களால்  செயல்படுத்த முடியும்.

நாங்கள் எதிர்பார்த்த மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட பல பெரிய பெரிய ப்ராஜெக்ட்களுக்கான எந்த நிதியையும் வழங்காமல் குறிப்பாக பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய 3548 கோடி ரூபாயை பற்றி இந்த பட்ஜெட்டில் எதுவுமே இல்லை சிறப்பாக செயல்பட்ட ஜல்ஜீவன் மிஷின் சார்பாக 3112 கோடிகளை வழங்காமலும்,  திருச்சியில் உள்ள இரண்டு அமைச்சர்கள் சார்ந்துள்ள துறைக்கு வழங்க வேண்டிய நிதி வழங்கப்படாமல் உள்ளது என்றால் இது எப்படிப்பட்ட பட்ஜெட் என்றார்.

விவசாயிகளாக இருந்தாலும், ஏழை எளிய மக்களாக இருந்தாலும் எல்லா தரப்பினருக்கும் ஏமாற்றம் அளிக்கக் கூடிய ஒரு பட்ஜெட்டாக தான் இது அமைந்திருக்கிறது என்றார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.