அங்குசம் சேனலில் இணைய

‘தங்கலான்’ டீமிற்கு தடபுடல் விருந்து வைத்த விக்ரம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

‘தங்கலான்’ டீமிற்கு தடபுடல் விருந்து வைத்த விக்ரம் ! – தமிழகம் மட்டுமல்ல, தென்னிந்தியா முழுவதும் அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘தங்கலான்’. சீயான் விக்ரம் போன்ற ஒரு நட்சத்திர நடிகரின் அர்ப்பணிப்புடன் கூடிய கடும் உழைப்பை அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள்.

இதனால் உற்சாகமடைந்துள்ள சீயான் விக்ரம் ‘தங்கலான்’ படத்தின் வெற்றிக்காக கடினமாக உழைத்த அனைத்து நடிகர்கள், நடிகைகள், உதவி இயக்குநர்கள், கலை இயக்குநர்கள் , தொழில்நுட்பக் கலைஞர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்பினார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இதனைத் தொடர்ந்து சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதான வளாகத்தில் உள்ள கலையரங்கத்திற்கு வருகை தந்த 500-க்கும் மேற்பட்டவர்களை சீயான் விக்ரம் வரவேற்றார். வருகை தந்த அனைவருக்கும் முதலில் தம்முடைய நன்றியை தெரிவித்தார் விக்ரம்.

விருந்து வைத்த விக்ரம்
விருந்து வைத்த விக்ரம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

படக்குழுவினருக்கு மிகவும் பிடித்த உணவு வகைகளை முன்கூட்டியே அவர்களிடமே கேட்டு தெரிந்து அந்த உணவு வகைகளை பிரபலமான சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜிடம் வழங்கியிருந்தார். அவருடைய கைப்பக்குவத்தில் உருவான சிறப்புஉணவுவகைகளை அனைவருக்கும் பரிமாறினார் சீயான் விக்ரம்.

தொழிலாளர் குடும்ப உறுப்பினர்கள் சீயான் விக்ரமுடன் பேசி, மகிழ்ந்து, செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர்.

இந்த விருந்து நிகழ்ச்சியில் படத்தில் நடித்த மாளவிகா மோகனன், பார்வதி, நடிகர் பசுபதி, படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் திருமதி. நேகா ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் தந்தை கே. ஈஸ்வரன், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தனஞ்ஜெயன், இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விக்ரம் அளித்த விருந்து, திருமண விருந்தை விட தடபுடலாக சிறப்பாக இருந்தது என மகிழ்ச்சி & திருப்தியுடன்அனைவரும் தங்கலானுக்கு நன்றி தெரிவித்து விடை பெற்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.