அகதிகள் முகாமில் உள்ள பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற கிராம நிர்வாக அலுவலர் கைது
அகதிகள் முகாமில் உள்ள பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற கிராம நிர்வாக அலுவலர் கைது
கரூர் மாவட்டம்,அரவக்குறிச்சி தாலுக்கா வெஞ்சமாம்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன் மகன் அன்புராஜ் வயது 36. இவர் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, சிவாயம் வடக்கு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். சிவாயம் வடக்கு வருவாய் கிராமத்துக்குட்பட்ட இரும்பூதிப் பட்டியில் உள்ள அகதிகள் முகாமில் குடும்பத்துடன் உள்ள 30 வயது திருமணமான பெண். இவரது கணவர் வெளியூரில் வேலை செய்து வருகிறார் மாதத்திற்கு ஒரு முறை வீட்டுக்கு வருவார் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி பகலில் அவரது வீட்டிற்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் அன்புராஜ் அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரை பலாத்காரம் செய்ய முயன்ற போது அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து கிராம நிர்வாக அலுவலருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி விசாரணை மேற்கொண்டதில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை இன்று கைது செய்து குளித்தலை அரசு மருத்துவமனையில் இன்று மதியம் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தினர். பின்னர், குளித்தலை நீதித்துறை நடுவர் எண் 2-ல் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி, அன்புராஜை குளித்தலை சிறையில் அடைத்தனர்.