பொய்யான தகவல்களை பரப்புகிறாரா சவுக்கு சங்கர்? சிறைத்துறை அதிகாரிகள் கொந்தளிப்பு

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

பொய்யான தகவல்களை பரப்புகிறாரா சவுக்கு சங்கர்? சிறைத்துறை அதிகாரிகள் கொந்தளிப்பு

 

யூடிபரான சவுக்கு சங்கர் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், சிறையில் உள்ள சவுக்கு சங்கர் உடல்நிலை மோசமாக உள்ளதாக தகவல்கள் ஊடகங்களுக்கு பறந்து வருகிறது.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

சிறைத்துறை அதிகாரிகள் இதுவரை அவரை மருத்துவமனைக்கு கூட அழைத்துச் செல்லவில்லை எனவும், இதனால் அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் தகவல்கள் அவரது ஆதரவாளர்கள், சில வக்கீல்கள் மூலமாக தகவல்கள் பரப்பபடுகின்றது. இதனால் சவுக்கு சங்கரின் ஆதரவாளர்கள் சிறைத்துறை அதிகாரிகள் மீது அதிருப்தி மற்றும் கடும் கோபத்தில் உள்ளனர்.

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

குறிப்பாக கடலூர் சிறை கண்காணிப்பாளர் செந்தில் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்தவிதமான கருத்துக்களையும் ஊடகங்களுக்கு தெரிவிக்கவில்லை.

 

3
 கடலூர் சிறை
கடலூர் சிறை

 

இந்த நிலையில் உண்மையில் கடலூர் சிறைக்குள் என்னதான் நடக்கிறது? சவுக்கு சங்கரின் உண்மையான நிலைமை என்னவென்று விசாரணையில் இறங்கினோம்.

4

இது குறித்து பெயர் வேண்டாம் என பேசிய அதிகாரிகள் சிலர். சங்கர் தற்போது தண்டனை கைதிகள் அழைக்கப்படும் பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை தனி அறையில் அடைத்து வைத்துள்ளனர். காலை, மாலை போக மற்ற நேரங்களில் சங்கர் உள்ளேதான் இருப்பார். எல்லாக் கைதிகளைப் போல அவருக்கும் எல்லாவிதமான சலுகைகள் கொடுக்கும் சிறைக்குள் கொடுக்கப்படுகிறது.

சிறைக்கு வெளியே சவுக்கு ஏ.சி.ரூம்கள், அசைவ உணவு, கார், ரெமி மார்ட்டின், தினசரி 3 யூ டியூப் சேனல்கள் இண்டர்வியூ என சகல வசதிகளோடு இந்தியாவின் பிரதமர் முதல் முதல்வர் ஸ்டாலின் ஆரம்பித்து அதிகாரிகள் வரை அவருக்கு யாரை எல்லாம் விமர்சனம் செய்ய முடியுமோ அவர்களை எல்லாம் விமர்சனம் என்கிற பெயரில் வாய்க்கு வந்தபடி பேசிக்கிட்டு ஜாலியாக இருந்தார்.

இந்த நிலையில் தான் நீதிபதிகள் மீது வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக் கொண்டார். வாயை வாடகைக்கு விட்டவர் போல எல்லாத்தையும் பேசியதை போல நீத்துறையை பேசியது நீதிபதிகளை உச்சகட்ட கோபத்தை அடைய வைத்தது.

அது போக வழக்கு நடக்கும் போதும், தண்டனையை அறிவிக்க முன்பும் சங்கர் பேசியதிற்கு முன்பு மன்னிப்பு கேட்க சொன்னார்கள்.

ஆனால் வாய்க்கொழுப்பு எடுத்த சங்கர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க வில்லை. இதனால் மேலும் நீதிபதிகள் கோபம் அதிகமாகி அவரை 6 மாதம் சிறையில் தள்ளினார்கள்.

சங்கர் சிறைக்கு செல்லாமல் இருக்க அவருக்கு 4 முறை வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவர் அதை உதாசினப்படுத்தினார். விளைவு இப்போது 6மாத தண்டனை அனுபவிக்கிறார்.

இந்த நிலையில்தான் அவர் வகித்து வந்த அரசு வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது அவரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்தனர். பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு ஆனையை சவுக்கு சங்கருக்கு அனுப்பினர்.

 கடலூர் சிறை
கடலூர் சிறை

ஆனால் சங்கர் அந்த கடிதத்தை வாங்க மறுத்து விட்டார். இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். இதனால் சங்கரை சந்திக்க பார்வையாளர்களுக்கு ஒரு மாதம் தடை போட்டுள்ளனர்.

இது எல்லாக் கைதிகளுக்கும் நடக்கும் வழக்கமான நடைமுறைதான். ஏற்கனவே சிறையில் சிறைவிதிகளுக்கு எதிராக நடந்ததாக பல்வேறு வி.வி.ஐ.பி. சிறைக் கைதிகளும் இதே போல பார்வையாளர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை மறைக்கவே சங்கர் அவருடைய வக்கீல் மூலமாக ஊடகங்களுக்கு பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்.

இதனால் மேலும் அவருக்கு சிக்கல் எழும். அவர் 6 மாதங்களுக்கு மேலும் சிறையில் தண்டனையை கழிக்க நேரிடும். மேலும் சங்கர் தான் தண்டனை அனுபவிக்க வேண்டும் பார்வையாளர்கள் இல்லை ” என்றனர்.

 

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.