ஊர்ப்புற நூலகர்கள் உண்ணாவிரதப் போராட்டம் !
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் பொது நூலக இயக்கத்தின் பொது நூலக துறையில் சுமார் 13 ஆண்டுகளாக ஊர்ப்புற நூலகர்களாக சிறப்பு காலமுறை ஊதியத்தில் பதவி உயர்வு பெறாமலும் மற்றும் காலமுறை ஊதியம் பெறாமலும், மிகவும் குறைந்த ஊதியத்தில் 1915 ஊர்ப்புற நூலகங்களில் பணியாற்றி வரும் சுமார் 1006 ஊர்ப்புற நூலகர்களின் கோரிக்கைகளான ஊர்ப்புற நூலகங்களை கிளை நூலகங்களாக தரம் உயர்த்திடவும், காலமுறை ஊதியம் வழங்கவும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோயம்புத்தூர் மதுரை மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளில் மண்டல அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஊர்ப்புற நூலகர்களின் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் ஒருங்கிணைந்த ஊர்ப்புற நூலகங்கள் நல அமைப்பு மாநில துணை தலைவர் நரசிம்மா பல்லவன் தலைமையில் மதுரை ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்கள் சார்பாக மண்டல அளவில் போராட்டம் நடைபெறுகிறது.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்