புதுச்சேரியில் ‘போக்ஸோ’ குற்றங்களைக் கட்டுப்படுத்த சிறப்புத் திட்டம் வேண்டும் !
புதுச்சேரியில் ‘போக்ஸோ’ குற்றங்களைக் கட்டுப்படுத்த சிறப்புத் திட்டம் வேண்டும் – புதுச்சேரியில் 9 வயது சிறுமி கூட்டுப் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டிருந்தாலும் குழந்தைகள் மீதான வன்முறையைத் தடுக்க அது மட்டுமே போதாது.
புதுச்சேரியில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே வருவதை தேசிய குற்ற ஆவண மைய அறிக்கை காட்டுகிறது. 2020 ஆம் ஆண்டு 71 ஆக இருந்த குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் 2021 இல் 122 ஆக உயர்ந்து 2022 இல் அது 139 ஆக அதிகரித்தது என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. புதுச்சேரியில் பெருகிவரும் போதைப்பொருள் நடமாட்டம் அதற்கு முதன்மையான காரணம் எனக் கூறப்படுகிறது.
குழந்தைகளுக்கு எதிரான வன்முறையைக் கட்டுப்படுத்த புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு ரங்கசாமி அவர்கள் சிறப்புத் திட்டம் ஒன்றை அறிவிக்கவேண்டும்.
– ரவிக்குமார் எம்.பி
இணைப்பு :