தமிழக அதிகாரிகளை உளவு பார்த்த வாட்ச்ஆப் குழு – சிவகாசியில் வெடித்த வைரல் ஆடியோக்கள் !
அதிகாரிகளை உளவு பார்த்த வாட்ச்ஆப் குழு – சிவகாசியில் வெடித்த வைரல்கள் ஆடியோக்கள் ! தமிழகத்தில் சட்டவிரோதமாக இயங்கி வரும் பட்டாசு உற்பத்தியாளர்கள், தங்களுக்குள் வாட்சப் குழு ஒன்றை உருவாக்கிக்கொண்டு அரசு அதிகாரிகளை நோட்டமிட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
“10 லட்சம் பேர் வேலை பாக்குறாங்க அவங்க எல்லாம் சாப்பிட வேண்டாம். நம்ம 1000 பேர் மட்டும் சாப்பிட்டால் போதும். பல கோடி ரூபாய் முதலீடு உள்ள போட்டு இருக்கோம்.” எனத் தொடங்கும் அந்த ஆடியோ பதிவுகள் ஒரு கணம் உறைய வைக்கின்றன.
விருதுநகர் மாவட்டத்தில், சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை உள்ளிட்டு ஆயிரத்திற்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
பட்டாசு ஆலையில் வெடி விபத்து உடல் சிதறி இத்தனை பேர் பலி என்பதாக பல விபத்துகள் நம் நெஞ்சங்களை உலுக்கியிருக்கின்றன.
இத்தகைய விபத்துகளுக்கும் அப்பாவி தொழிலாளர்களின் உயிரிழப்புகளுக்கும் விதி மீறல்களே அடிப்படையாக இருக்கின்றன.
பட்டாசு தொழிலை நம்பி இருக்கும் பல லட்சம் தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகும் என்பது குறித்த அக்கறை எதுவுமின்றி, உயிருக்கு அபாயம் விளைவிக்கும் அரசால் தடை செய்யப்பட்ட வெடிகளை உற்பத்தி செய்வது உள்ளிட்டு பல்வேறு விதமான விதிமீறல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பட்டாசு தொழிலில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு விபத்தில்லாமல் செயல்படும் பட்டாசு ஆலைகளுக்கு மத்தியில்,
இது போன்ற ஒரு சில நபர்கள் செய்யும், தவறுகளால் ஒட்டுமொத்த பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கி வருகிறார்கள்.
இதற்கு அரசு அதிகாரிகள் சிலரும் உடந்தையாக செயல்படுகிறார்கள் என்பது ஒருபுறமிருக்க; காவல்துறை, மாநில வெடி கட்டுப்பாட்டு துறை, மாவட்ட நிர்வாகத்தினர், தீயணைப்புத்துறை, வணிகவரித்துறை என தங்களைக் கண்காணித்து கட்டுப்படுத்தும் அனைத்து துறைகளிலும் கருப்பு ஆடுகளை ஷிப்ட் முறையில் நியமித்து உளவு பார்த்து இருக்கிறார்கள் என்பதுதான் தற்போது அம்பலமாகியிருக்கிறது.
அதிகாரி வீட்டில் இருந்து கிளம்புவது தொடங்கி, பணி முடித்து வீடு திரும்புவது வரையில் அத்தனை அசைவுகளையும் அப்டேட்டாக வாட்சப்பில் பகிர்ந்து இருக்கிறார்கள்.
அந்த வாட்சப் குழுவிற்கு அவர்கள் சூட்டியிருக்கும் பெயர் 🔥 Fire 🔥 boys 🔥.
இனி அவர்கள் மொழியிலேயே கேளுங்களேன் …
வீடியோ லிங்