பொதுத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் !
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகர வட்டார ரெட்டி நல சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் சாத்தூரில் நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 100 -க்கும் மேற்பட்ட 10- வகுப்பு மற்றும் பிளஸ் -2 தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை பரிசும் வழங்கி பேசினார் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரன்.
அவர் பேசுகையில், “இந்த சங்கம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை சமுதாய மக்களுக்கு செய்து வருகிறது. மேலும் வளர்ச்சி அடைந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் சொந்தமாக உருவாக்க வேண்டும். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் கல்வியிலும், ஆராய்ச்சி, புதுமுனைவு, விளையாட்டு, கலை மற்றும் சமூகப்பணி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சாதனைகள் படைக்க வேண்டும் அதற்கு இந்த அரசு உறுதுணையாக இருக்கும்” என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சாத்தூர் நகர வட்டார ரெட்டி நலச் சங்க தலைவர் சுந்தர்ராஜ், கௌரவ தலைவர் சண்முக, துணைத் தலைவர் மாரிக்கண்ணு, செயலாளர் சுப்பிரமணியன், துணைப் பொருளாளர் ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர்கள் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சரவணன் பெருமாள், ஆர்.எஸ்.ஆர்.குழுமா தலைவர் சண்முகையா, சன் இந்தியா பப்ளிக் ஸ்கூல் நிர்வாக இயக்குனர் பரமேஸ்வரி, மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் என பல கலந்து கொண்டனர்.
— B. மாரீஸ்வரன்