கம்ப்ளையிண்ட் வாங்க மறுத்த போலீஸ் ! டவரில் ஏறிய ஆசாமி !
விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த செல்லையா மகன் மாயாண்டி (45) என்பவர் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக சாத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது பணியில் இருந்த காவலர்கள், “பணம் யாரிடம் கொடுத்தீர்கள்? இதுகுறித்து மனு எழுதி கொடுக்க வேண்டும்” என கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஆத்திரமடைந்த மாயாண்டி, “மனு எழுதிக் கொடுத்துதான் பணத்தை வாங்க வேண்டும் என்றால் நான் பார்த்துக் கொள்கிறேன்” என கூறி அங்கிருந்து சென்றுள்ளார்.
பின்னர், சாத்தூர் நீதிமன்றம் அருகே உள்ள ஸ்டார் மருத்துவமனை அருகிலுள்ள டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
— மாரீஸ்வரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.