*’யோகிடா’ டிரெய்லர் ரிலீஸும் விஷால் — சாய் தன்ஷிகா திருமண தேதி ரிலீஸும்!*

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பேராண்மை, பரதேசி, கபாலி ( படத்தில் சாய் தன்ஷிகா கேரக்டர் பெயர் யோகி) சோலோ ஆகிய படங்களிலும்   சமீபத்தில் வெளியான ‘ஐந்தாம் வேதம்’ வெப் தொடரிலும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய ‘சாய் தன்ஷிகா’ முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘யோகிடா’. இப்படத்தில் சயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

குறுகிய கால த்தில் அதிக டிரான்ஸ்ஃபர் வாங்கும்  நேர்மையான காவல் ஆய்வாளராக நடிக்கிறார் சாய் தன்ஷிகா. தான் வேலை பார்க்கும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொல்லப்படுகிறார். அதை அவரது குடும்பத்தார் தற்கொலை என மாற்ற முயற்சிக்கின்றனர். இருப்பினும் அதை கொலை என நிரூபித்து குற்றவாளியை கைது செய்கிறார் சாய் தன்ஷிகா. ஆனால் குற்றவாளியை விடுவிக்கச் சொல்லி பல தரப்பில் இருந்தும் அவருக்கு அழுத்தம் தரப்படுகிறது. அதற்கு மறுப்பதால், இதைவிட மோசமான பகுதிக்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் மீண்டும் அவரை டிரான்ஸ்ஃபர் செய்கிறார்கள். அவர் அனுபவிக்கும் பல்வேறு இன்னல்களை சமாளித்து வெற்றி பெற்றாரா? இதான் ‘யோகிடா’ கதை.

Sri Kumaran Mini HAll Trichy

'யோகிடா' டிரெய்லர் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவுடன் விஷால் & சாய் தன்ஷிகா திருமணத் தேதி ரிலீஸும் மே.19- ஆம் தேதி இரவு சென்னையில் நடந்தது . இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட நடிகர் ராதாரவி, இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, மித்ரன் ஆர்.ஜவஹர், மீரா கதிரவன் ஆகியோர் படக்குழுவினரையும் திருமணம் செய்யப் போகும் புது ஜோடிகளையும் வாழ்த்திப் பேசினர்.

படத்தின் *இயக்குனர் கௌதம் கிருஷ்ணா*

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

“அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் நன்றி.  சாய் தன்ஷிகாவின் கடின உழைப்பு வாழ்க்கையில் பெரிய வெற்றியைத் தரட்டும் “.

 *சாய் தன்ஷிகா*

“பதினேழு வருடங்களாக  பத்திரிகையாளர்களுடன் பயணித்துக் கொண்டே,  தமிழ்த்திரையுலகில் எனக்கான ஒரு இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறேன். உழைப்பை மட்டுமே நம்பி இந்தத்துறையில் இத்தனை வருடம் பயணித்ததால்தான் ‘யோகிடா’ வரைக்கும் வந்துள்ளேன்15-ஆண்டுகளுக்கும் மேலாக விஷாலைத் தெரியும். நானும் அவரும் வரும் ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம். ஊடகத்தினர் அனைவரும் எங்களை வாழ்த்த வேண்டும்”.

 *விஷால்*

“இப்படம் சிறப்பாக வந்துள்ளது.  தயாரிப்பாளர்  செந்தில்குமார் எனக்கு நீண்டநாள் நண்பர். படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

'யோகிடா' டிரெய்லர் ரிலீஸும் விஷால்
‘யோகிடா’ டிரெய்லர் ரிலீஸும் விஷால்

சாய் தன்ஷிகாவும் நானும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இரு வீட்டார் சம்மதத்துடன் முடிவு செய்துள்ளோம். திருமணத்திற்குப் பிறகும் அவர் நடிப்பார்.

படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் சாய்தன்ஷிகா சிறப்பாக நடித்துள்ளார். சண்டைப் பயிற்சியாளர் கணேஷ்குமார் சண்டைக் காட்சிகளை மிகவும் நேர்த்தியாக வடிவமைத்துள்ளார். இயக்குனர் கௌதம் கிருஷ்ணா  திரைத்துறையில் மேன்மேலும் சாதிக்க வேண்டும்”.

Flats in Trichy for Sale

*டெக்னீஷியன்கள்*

எழுத்து மற்றும் இயக்கம்:கௌதம் கிருஷ்ணா,

தயாரிப்பு      :ஸ்ரீ மோனிகா சினி ஃபிலிம்ஸ் வி.செந்தில்குமார்,

ஒளிப்பதிவு   :எஸ்.கா. பூபதி

பின்னணி இசை  :தீபக் தேவ்

பாடல்கள் இசை : அஷ்வமித்ரா

படத்தொகுப்பு : ஜி. சசிக்குமார்

கலை இயக்கம் :ஜி.எஸ்.அனந்தன்

சண்டைப் பயிற்சி : கே. கணேஷ்குமார்

பாடல்கள் :ஜெயந்தி அஷ்வமித்ரா,

மக்கள் தொடர்பு:ரியாஸ் கே. அஹ்மத், பாரஸ் ரியாஸ்

 

—   மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.