விவேசினி – திரைப்படம் – அவசியம் பாருங்கள். -கவிஞர் நந்தலாலா
விவேசினி – திரைப்படம்
யாரும் தொடாத ஒரு விஷயத்தை இயக்குநர் பவன்
ராஜகோபால் கையாண்டுள்ளார்.
aha தளத்தில் பார்க்கலாம்.
காட்டு மரங்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள என்னமாதிரி செயல்படும் என்பதே கதையின் மையம்.
இதுவேகூட ரொம்பப் புதுசு.
இளம் வயதின் மோசமான துன்ப அனுபவங்கள், பிற்காலத்தில் பயமான அச்ச சூழலில் எப்படி
உருமாறி நிஜம்போல் தோன்றும்
என்பதை வேறு படங்கள் சொன்னதுபோல் தோன்றவில்லை.
இவை இரண்டும் சேர்ந்து
படு திரில்லரான படமாக வந்துள்ளது விவேசினி.
ஆஸ்ரமங்களின் காடழிப்பு
கதையின் பின்புலம்.
காவ்யா நவீனப் பெண் சக்தியாக வாழ்கிறார். நாசர்
பகுத்தறிவாளராக சிறக்கிறார்.
போராட்டம் பல வடிவங்களை
சந்தித்தாலும், அதன் ஆன்மா
அநீதியை எதிர்ப்பதே என்பதை
கலாப்பூர்வமாக சொன்ன படம்
இந்த விவேசினி.
எனக்குத் தெரிந்து அத்திபாக்கம் வேங்கடாசல நாயகரின் பெயரை உச்சரித்த
முதல் தமிழ் சினிமா இது.
இவ்வளவு சுவாரஸ்யமான படங்கள்கூட ஏன்
திரையரங்குகளை சேர முடியவில்லை என்பது
கவலையான சோகம்.
வணிகப் பிடியில்
சிக்கி கலைகள் நசுங்கும்போது
நல்ல படங்கள்கூட தன் பார்வையாளனை இழக்கிறது என்பது மேலும் ஒரு சோகம்.
அவசியம் பாருங்கள்.
-நந்தலாலா