அங்குசம் பார்வையில் ‘ஜாலியோ ஜிம்கானா’ திரைவிமா்சனம்
தயாரிப்பு : ’டிரான்ஸ் இந்தியா மீடியா & எண்டெர்டெய்ண்மெண்ட்’ எம்.ராஜேந்திர ராஜன் & லீலா. டைரக்ஷன் : சக்தி சிதம்பரம். நடிகர்—நடிகைகள் : பிரபுதேவா, மடோனா செபஸ்டின், அபிராமி, பூஜிதா பொன்னடா, அபிராமி பார்கவன், மரியா, யாஷிகா ஆனந்த், யோகிபாபு, மதுசூதன் ராவ், ஒய்.ஜி.மகேந்திரா, ரெடின் கிங்ஸ்லி, சாய் தீனா, ஜான்விஜய், எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ், சுரேஷ் சக்கரவர்த்தி, ‘ஆதித்யா’ கதிர், நாஞ்சில் சம்பத், ஆடுகளம் நரேன், ஆதவன். ஒளிப்பதிவு : கணேஷ் சந்திரா, இசை : அஸ்வின் விநாயகமூர்த்தி, எடிட்டிங் : ஆர்.ராமர் & நிரஞ்சன் ஆண்டனி, பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா & அப்துல்நாசர்.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஏழைகளுக்காகவும் அதிகார வர்க்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காவும் வாதாடும் வக்கீல் பிரபுதேவா. தென்காசி எம்.எல்.ஏ. மதுசூதன் ராவும் அவரது டாக்டர் மனைவியும் சேர்ந்து இலவச மருத்துவ முகாம் என்ற பெயரில் நாடகமாடி ஏழைகளின் ஆதார் அட்டை, ரேஷன் கார்டை வைத்து பல கோடி ரூபாய்க்கான இன்ஸ்சூரன்ஸ் பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர். பொம்மலாட்டக் கலைஞராக இருக்கும் பெண்மணி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, இன்ஸ்சூரன்ஸ் பணத்தை எடுக்க முயற்சிக்கும் போது இந்த மோசடி அம்பலத்திற்கு வருகிறது.
இதை பிரபுதேவாவின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின் அந்தப் பெண் எம்.எல்.ஏ.வால் கார் ஏற்றிக் கொல்லப்படுகிறார். அதன் பின் நடக்கும் அரசியல் சடுகுடு ஆட்டம் தான் இந்த ‘ஜாலியோ ஜிம்கானா’.
படிப்பதற்கு கதை சுவாரஸ்யமாத்தானே இருக்கு. ஆனா டைரக்டர் சக்தி சிதம்பரம், ஃபுல் & ஃபுல் காமெடியாக ட்ரீட் தருகிறேன் பேர்வழி என களத்தில் இறங்கி, திரைக்கதையை படுமோசமாக ரிப்பேராக்கிவிட்டார். இன்னும் சொல்லப் போனால் படம் முடிய இருபது நிமிடம் இருக்கும் போது தான், டைரக்டருக்கு கதையை பத்தின நினைப்பு வந்திருக்கும் போல. அந்த வகையில நாம ஓரளவு தப்பிச்சோம்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தயாரிப்பாளர் ராஜன் சாருக்கு கதை ரொம்பவே பிடித்து விட்டது. நான் கேட்காமலேயே படத்தி
பத்து நிமிடங்கள் வரும் இரண்டு கோர்ட் சீன்களைத் தவிர, மீதி இரண்டு மணி நேரமும் பிணமாகவே நடிக்க ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கார் பிரபுதேவா. இது பல சீன்களில் நன்றாகவே ஒர்க்-அவுட் ஆகியிருக்கு. யோகிபாவுக்கே ட்ஃப் கொடுக்கும் அளவும் காமெடி டயலாக் டெலிவரியில் பாஸ்மார்க் வாங்கிவிட்டார் மடோனா செபஸ்டின்.
இவருக்கு அடுத்தபடியாக அபிராமியும் வெளுத்துக்கட்டிவிட்டார். இவர்களின் கூட்டணியில் வரும் அபிராமி பார்கவனும் மரியாவும் தங்களது ஸ்பேசை கரெக்டாக ஃபில் பண்ணியிருக்கிறார்கள். பிரபுதேவாவின் அசிஸ்டெண்ட் வக்கீலாக வரும் பூஜிதா பொன்னடா எல்லா சீன்களிலும் பளிச்சென இருக்கார், வசீகரமாகவும் இருக்கார்.
சர்ச் ஃபாதராக யோகிபாபு, கமிஷனராக எம்.எஸ்.பாஸ்கர், இன்ஸ்பெக்டராக ஜான்விஜய் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள்.
“பாடலாசிரியர் ஜெகன் கவிராஜின் “போலீஸ்காரனைக் கட்டிக்கிட்டா” பாடலில் அஸ்வின் விநாயகமூர்த்தியின் இளமைத்துள்ளல் தெரிகிறது.
நல்ல கதை இருக்கு. ஆனா காமெடி ஒர்க்-அவுட் ஆகவில்லை இந்த ‘ஜாலியோ ஜிம்கானா’வில்.
— மதுரை மாறன்.