”வள்ளல்” விஜயகாந்த்!
”வள்ளல்” விஜயகாந்த்!
”எடுத்துக்கய்யா.. மக்கள் கொடுத்தது… நாலு பேரு இருந்தா ஒரு நேரம் சோறு போடமாட்டீங்களா? என்னய்யா காசு..காசு.. பணம்.. அட போங்கையா நீங்களும் உங்கள் காசும் பணமும். கோடி கோடியா சேர்த்து வச்சு எங்கையா கொண்டு போக போறீங்க? செத்தாக்கூட அறுநாக்கொடிய அத்துட்டுதான் உள்ளத்தூக்கி போடப்போறான்.”
சினிமாவில் பேசி அரங்கம் அதிர வாங்கிய கைத்தட்டுகள் நூற்றுக்கணக்கில் இருந்தாலும்; தேமுதிக என்றொரு அரசியல் கட்சியை கட்டமைத்து அதன் தலைவர் என்ற முறையில் பொதுவெளியில் அவர் பேசிய இந்த உரைவீச்சு ஒன்றே அவரது வாழ்நாள் புகழுக்கு உரித்தானது. ”கடவுளுக்கு செய்றதவிட, காசுபணம் இல்லாத ஏழைங்களுக்கு செய்யிங்கனு” சொன்னதோடு, அவ்வாறு செய்தும் காட்டியவர். அதானால்தான், சினிமா நடிகர், தேமுதிக தலைவர் என்ற அடையாளங்களைத் தாண்டி,”வள்ளல் விஜயகாந்த்” என்ற அடைமொழி அவருக்கு வசமானது.
கட்சி தொடங்கிய மிக மிக குறுகிய காலத்திலேயே, எதிர்க்கட்சி என்ற இடத்தில் கட்சியை கொண்டு சென்றதாகட்டும்; எவரும் முகத்துக்கு நேரே பேச அஞ்சும் ஜெ.விடம் சட்டசபையிலேயே நேருக்குநேர் மல்லுக்கு நின்ற தருணங்களாகட்டும், தனக்கென்ற தனித்த அடையாளங்களை விட்டு சென்றிருக்கிறார், நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்.
டிச-28 அன்று உடல்நலக்குறைவால் காலமான விஜயகாந்த் அவர்களுக்கு அங்குசம் சார்பில் இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
– ஆசிரியர், அங்குசம்.