அங்குசம் சேனலில் இணைய

விசிக பாமக ஒரே கூட்டணியில் இருப்பதுதான் நல்லது – செல்வ பெருந்தகை

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பாஜக கூட்டணியில் காங்கிரஸ்  இருப்பதுதான் நல்லது எனக்  வேடிக்கையாக கூறி இதை கடந்துபோய்விட முடியும் ஆனால்,

பாஜக பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது என்கிற எம் தலைவரின் கொள்கை முடிவில் தாங்கள் தலையிடுவதால் பதில் கூற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இரண்டு பெரும் சமூகங்கள் அரசியல் களத்திலும் அதிகார களத்திலும் பண்பாட்டு கலாச்சார களத்திலும் இணைந்து பயணித்தால் தமிழ்நாட்டில் கால் ஊன்ற நினைக்கும் சங்கிகளின் எண்ணத்தை தவிடுபொடியாக்கலாம் என்பது உண்மைதான் ஆனால் அந்த எண்ணமும் கொள்கையும் பாமக விற்கு இல்லையே பெருந்தகையாரே ?

தந்தைக்கும் மகனுக்கும் நடைபெறும் அதிகார சண்டையில் பஞ்சாயத்து செய்ய பார்ப்பண ஆடிட்டர் குருமூர்த்தி தானே தேவைப்படுகிறார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

திருமாவளவன்தலைவர் திருமாவின் மீது அளவற்ற பாசம் கொண்டுள்ளதாக கூறும் அய்யா ராமதாஸ் அவர்கள் குருமூர்த்திக்கும் பதிலாக தலைவர் திருமாவை அழைத்திருக்கலாமே அப்படி அழைத்திருந்தால் மருத்துவர் ராமதாஸ் மீண்டும் சமூக நீதி களத்திற்கு திரும்புகிறார் என்று எடுத்துக்கொள்ளலாம் அழைக்கவில்லையே பெருந்தகையாரே?

இந்த இடத்தில் எம் தலைவர் திருமாவின் பெருந்தன்மையை நினைத்து பாருங்கள்.

எம் தலைவருக்கும் எம் கட்சிக்கும் பாமக வும் ராமதாசும் இழைத்த கொடுமைகள் எத்தனை எத்தனை!

நாடக காதலை சொல்லிக் கொடுக்கிறார் திருமா என்று மனசாட்சியே இல்லாமல் அவதூறு பரப்பினார்களே கூலிங்கிளாசும் ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்து மாற்று சாதி பெண்களை கவறுகிறார்கள் என எங்களின் மீது காழ்ப்புணர்ச்சியை கொட்டினார்களே அப்படி கொட்டியதால் பலியான உயிர்கள் எத்தனை எத்தனை!

மறந்துவிட முடியுமா பெருந்தகையாரே ?

பல்வேறு வழிகளில் எம்மை காயப்படுத்திய பாமக கட்சி இரண்டாக பிளவுபட்டு கிடப்பதை நியாயமாக நாங்கள் கொண்டாடியிருக்க வேண்டும் ஆனால் இந்த நேரத்திலும், அய்யா ராமதாஸ் அவர்களை  பெருமைப்படுத்திய தலைவர் திருமாவின் பெருந்தன்மை அரசியலை நினைத்து பாருங்கள்.

திருமாவளவன்
திருமாவளவன்

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

மறப்போம் மன்னிப்போம் என்ற அண்ணாவின் பொன்மொழிகளை நீங்கள் கூறலாம் தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு  என்பதையும் தங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.

கடந்த காலங்களில் விசிகவின் அரசியல் நகர்வுகளில் தேசம் காப்போம் சனாதனம் எதிர்ப்போம் அரசமைப்புச் சட்டம் பாதுகாப்போம் சமூக நீதி காப்போம் போன்ற  பொதுநலன்களை மட்டுமே முன்னிலை படுத்தினோம் ஆனால் பாமக மீண்டும் சாதி மாநாட்டை தானே ஒருங்கிணைத்தது.

சாதி ஒழிப்பையும் சமூக நீதியையும் சகோதரத்துவத்தையும் மதச்சார்பின்மையையும் பன்மைத்துவத்தையும் மையமாக கொண்டு செயல்படுகிற விசிக வும் இவற்றிற்கெல்லாம் எதிராக செயல்படுகிற பாமக வும் எப்படி ஒரே கூட்டணியில் பயணிக்க முடியும் பெருந்தகையாரே ?

கூட்டணி வேறு கொள்கை வேறு என்று பேசுகிற சராசரி அரசியல் கட்சியாக விசிக வை எடுத்துக்கொண்டீரா அல்லது அணியும் துணிகளை மாற்றுவது போல அணிகளை மாற்றிக்கொள்ளும் தேர்தலுக்காக மட்டுமே இயங்குகிற கட்சி விசிக என எண்ணிவிட்டீரா?

சிபிச்சந்தர், மாநில கொள்கை பரப்புச் செயலாளர், விசிக
சிபிச்சந்தர், மாநில கொள்கை பரப்புச் செயலாளர், விசிக

இப்பவும் கூறுகிறோம் பெருந்தகையாரே

எங்களுக்கு தேர்தலும் அதன் மூலம் வரும் அதிகாரமும் இரண்டாம் பட்சமே எங்களின் உயரிய நோக்கம் சாதி ஒழிப்பு சமூகநீதி சகோதரத்துவம்  மதச்சார்பின்மை அரசமைப்புச் சட்டத்தின் வழியே அரசுகள் இதிலிருந்து மாறுபடுகிற எந்த கூட்டணியிலும் விசிக இருக்காது தலைவரும் அவர் வழிகாட்டுதலில் பயணிக்கிற சிறுத்தைகளும் தெளிவாக இருக்கிறோம்.

அமைப்பாவோம், அங்கீகாரம் பெறுவோம், அதிகாரம் வெல்வோம் இந்த மூன்றில் இரண்டை எட்டிவிவிட்டோம் மூன்றாவாதையும் அடைவோம் குறுக்கு அரசியலில்  அல்ல கொள்கை வழியில்.

பேர அரசியலில் அல்ல நேர் வழி அரசியலில் சனாதனதன கும்பலின் ஆதரவில் அல்ல அம்பேத்கர் தந்தை பெரியார் காரல் மார்க்ஸ் ஆகியோரின் கோட்பாட்டு வழியில். பட்ட காயம் எத்தனையோ ராசா அதை சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா ஆறிடுமோ ராசா ?

 

சிபிச்சந்தர், மாநில கொள்கை பரப்புச் செயலாளர்

விடுதலை சிறுத்தைகள் கட்சி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.