அங்குசம் சேனலில் இணைய

கட்சிக்காக தன் சொந்த பணத்தை செலவழித்தவனுக்கு உதவ கூட யாரும் இல்லையா ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கட்சிக்காக தன் சொந்த பணத்தை செலவழித்தவனுக்கு உதவ கூட யாரும் இல்லையா ?  தமிழ்நாட்டில் பல இடங்களில் VKN என்ற பெயரில் இது போன்ற கட்டிடங்களை கட்டி திமுக காரன் இலவசமாக தங்குவதற்கு வசதி செய்து கொடுத்தவர் திருச்சியை சேர்ந்த VKN என்ற V.கண்ணப்பன் அவர்கள்.அந்த கட்டிடத்தை Zoom செய்து பார்த்தால் கருப்பு சிவப்பு பார்டர் தெரியும்.

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மாவட்ட கழகம் தேர்தல் நிதியாக ஐந்து லட்சம் கொடுத்தால்
திரு.கண்ணப்பன் அவர்கள் தேர்தல் நிதியாக இரண்டு லட்சம் கொடுப்பாராம்..அவ்வளவு வெறி பிடித்த திமுககாரர்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

vkn
vkn

அவர் மறைந்த நிலையில் குற்றாலத்தில் உள்ள இது போன்ற கட்டிடம் ஒன்று குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் சுஷ்மா அவர்களால் இழுத்து பூட்டப்பட்டுள்ளது. கட்சிக்காரன் தங்குவதற்காக கட்டப்பட்ட அந்த கட்டிடம் இன்று வரி கட்டவில்லை என்று பூட்டப்பட்டுள்ளது..

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இது சம்பந்தமாக நீதி மன்றம் சென்ற கண்ணப்பன் அவர்கள் மகன் ராஜா என்பவர் கட்டிடத்தை திறக்க சொல்லி நீதிமன்ற உத்தரவு வாங்கி வந்தும் திறக்க மறுக்கிறாராம் குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் சுஷ்மா.அமைச்சரே வந்தாலும் திறக்க முடியாது என்கிறாராம்.இது சம்பந்தமாக ஒரு அமைச்சர் வரை போயும்.
ஒரு உதவியும் இல்லையாம்.முதலில் கேட்டவர்.பிறகு போனால் தலையை திருப்பி கொள்கிறாராம்.

கொரோனா சமயத்தில் இந்த கட்டிடத்துக்கு பிரச்சனை வந்த போது முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவ.பத்மநாதன் அவர்கள் தலையிட்டு பிரச்சனையை தீர்த்துள்ளார்.

மீண்டும் இது சம்பந்தமாக திரு. சிவ பத்மநாபனிடம் பேசினேன்.உதவுவதாக கூறியுள்ளார்.  கட்சிக்காக தன் சொந்த பணத்தை செலவழித்தவனுக்கு உதவ கூட யாரும் இல்லையா?

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

முகநூலில்: என்.ஜெயராமன்.

2021ம் ஆண்டு வி.கே.என். சிலை திறப்பு விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய உரையின் சிலபகுதிகள்…

குற்றாலத்தில் உள்ள வி.கே.என். கட்டிடம்
குற்றாலத்தில் உள்ள வி.கே.என். கட்டிடம்

தி.மு.க என்ற மூன்றெழுத்துக்குக் கிடைத்த சொத்துதான் வி.கே.என். என்ற மூன்றெழுத்து. வி.கே.என். என்ற சொல்லையும் அய்யா கண்ணப்பன் அவர்களையும் எப்படி பிரிக்க முடியாதோ, அந்தளவுக்கு வி.கே.என் – என்பதையும் தி.மு.க.வையும் பிரிக்க முடியாது. அந்தளவுக்கு கழகத்தோடு ரத்தமும் சதையுமாக இணைந்து கொண்டவர் தான் வி.கே.என்.கண்ணப்பன்

பொதுவாக தொழில் அதிபர்கள், அரசியலில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அப்படியே ஆர்வம் உடையவர்களாக இருந்தாலும் வெளிப்படையாக அடையாளம் காட்ட மாட்டார்கள். சில தொழிலதிபர்கள், ஆட்சிகள் மாறும் போது மாறிவிடுவார்கள். ஆனால் நிறம் மாறாத, ஒரே தலைமையை ஏற்று அதில் உறுதியாக இருந்த தொழிலதிபர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் முக்கியமானவர் வி.கே.என். கண்ணப்பன்

கழகத்தின் மீதான பற்றையோ, தலைவர் கலைஞர் மீதான பாசத்தையோ, அவர் என்றும் மறைத்தது இல்லை. அதனால் தான் கழகத்தின் சார்பில் சிலை அமைக்கப்படுகிறது. உழைப்பால் உயர்ந்த உத்தம மனிதர்கள் வரிசையில் வி.கே.என். கண்ணப்பன் அவர்கள் இடம்பெறுவார்கள்.

“வி.கே.என் என்ற தொழிலதிபரின் சிலை அல்ல; முத்தமிழறிஞர் கலைஞரின் ஒரு பக்தரின் சிலை – எதையும் எதிர்பாராமல் கழகத்துக்காக உழைத்த ஒரு மாபெரும் தொண்டனின் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது” என வள்ளல் வி.கே.என்.கண்ணப்பன் அவர்களது சிலையைத் திறந்து வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.