மலேசியாவில் கோலாகலமாக நடைபெற்ற VV ICONIC AWARDS 2026

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

நடிகர், சமூக செயற்பாட்டாளர் மற்றும் VV ENTERTAINMENTS நிறுவனர் விஜய் விஷ்வா அவர்களின் தலைமையில், VV ENTERTAINMENTS சார்பில், விமர்சகன் Media உடன் இணைந்து நடைபெற்ற VV ICONIC AWARDS 2026 – MALAYSIA விருது விழா கோலாலம்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்தியா மற்றும் மலேசியாவைச் சேர்ந்த கலை மற்றும் கல்வித் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு இவ்விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில் Persatuan Hak Masyarakat Malaysia நிறுவனர் முஸ்தபா, UCMAS நிறுவனர் மெய்யாமை, Brainy Bobs நிறுவனர் பிரியா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டு கௌரவிக்கப்பட்டனர். மேலும், தையல், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறைகளில் நீண்டகால அர்ப்பணிப்பை பாராட்டி சரவணன் S.P. அவர்களுக்கும், மலேசிய துணை சட்ட அமைச்சர் குலசேகரன் அவர்களுக்கும் Lifetime Achievement Awards வழங்கப்பட்டன.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இந்நிகழ்வில் மலேசிய துணை சட்ட அமைச்சர் குலசேகரன் அவர்கள் Chief Guest ஆக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். மேலும், ஒளிப்பதிவாளர் தேவன், Ojasvi Dance & Martial Arts Academy நிறுவனர் சுப்ரியா மற்றும் Dance Master Guru. Sri. Chandramohan ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்தியா மற்றும் மலேசியாவைச் சேர்ந்த சாதனையாளர்களை ஒரே மேடையில் கௌரவித்த VV ICONIC AWARDS 2026 – MALAYSIA, கலை மற்றும் கல்வித் துறையின் சிறப்பை கொண்டாடும் ஒரு முக்கியமான விழாவாக அமைந்தது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.