கவுரவத்திற்கு மாரடிக்க சாப்பாட்டை வீணடிப்பதா?

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

கவுரவத்திற்கு மாரடிக்க சாப்பாட்டை வீணடிப்பதா?

விஷேச வீடுகளில் வீணடிக்கப்படும் உணவு மற்றும்கேக் போன்ற பல விஷயங்களை பலமுறை நானும் பதிவிட்டிருக்கிறேன். சக தொழில்காரர் புதுச்சேரியை சேர்ந்த தம்பி குமுறல் இது.  விசேஷத்துக்கு போனோமா… போட்டோ வீடியோ எடுத்தோமா… காச வாங்கிட்டு அப்பிடியே வந்துடனும். நமக்கு எதுக்கு பாஸ் என்போர் மாற்று வழியில் செல்க. சமூகத்தை படிப்பவனே சிறந்த படைப்பா ளியாக கலைஞனாக இருக்கமுடியும்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

நீங்க வீணாக்குங்க பாஸ் நாங்க இருக்கோம்…ஆமா நீங்க சாப்பிடுற சாப்பாட்டை எப்படி வேணாலும் வீணாக்குங்க… விவசாயிங்க நாங்க இருக்கோம்…ஆனா, இங்க ஒரு வேளை உணவு கிடைக்காமல் எத்தனையோ கூட்டம் பசியோடு தூங்க போகுது அப்படிங்கறத மட்டும் மறந்துடாதீங்க…  யாரோ சேத்துல கால் வச்சு, உழவு ஓட்டி, பெரம்படிச்சு, நடவு நட்டு, மழை வெயிலுன்னு பாதுகாத்து, நட்ட வெள்ளாமைக்கு பத்து பைசா கூட லாபம் பாக்காம, அடி வயித்துல அடிச்சுக்கிட்டு… அந்த அரிசி, பருக்கய உங்க தட்டு வரைக்கும்கொண்டு சேர்த்த அந்த முட்டாள சொல்லணும்…

ஒரு கல்யாணத்துல பலதரப் பட்ட மனுஷங்க வந்து போறாங்க…வயசானவங்க, சுகர் பேசன்ட், பிரஷர் பேசன்ட், புடிச்சது, புடிக்காதது, சின்ன பசங்க, இளவட்டகாரங்க, சக்கர, உப்பு, அப்படின்னு நிறைய தினுசா சாப்பிட பந்திக்குபோவாங்க….

3

எல்லாரும் வர்றதுக்கு முன்னாடியே 550இலைக்கு, அஞ்சு முட்டும் அடுக்கி வச்சு இலை நிறைய பரப்பி வச்சு, அதுல உங்க பவுச காட்ட நினைக்கிறீங்க…  ஆனா கொடுமை என்னன்னா.. அடுத்து அந்த இலையில யாரு உட்கார போறாங்க அப்படிங்கறது தான்…?அத்தனையும் அடுக்கி வச்ச இலையில உட்காரவங்களோட மனநிலையும், உடல்நிலையும் பொறுத்து தான், நீங்க விருந்து வச்ச அத்தனையும் அந்த மனுஷனுடைய வயிற்றுக்கு போகுது… மத்ததெல்லாம் குப்பைக்குத்தான்…

ஒரு கல்யாண மண்டபத்துல, உணவு கூடத்துல ஒரு பந்தி முடிஞ்ச உடனே நல்லா கவனிச்சு பாருங்க, இலையில மிச்சம் இருக்கிற ஒட்டுமொத்த சாப்பாட்டையும் கணக்கு பண்ணா…நூற்றுக்கு 40 சதவீதம் வேஸ்ட்…எது யாருக்கு பிடிக்கும் எது யாருக்கு பிடிக்காதுன்னு தெரியாத உங்களுக்கு…பத்துநிமிஷம் காத்திருந்து… உட்கார வச்சு இலையை போட்டு வேணுங்கிறத கேட்டு பரிமாறிகொடுத்தாலே பாதிய மிச்சம் பண்ணிடலாம்…

4

ஆனா, இந்த பாழாப்போன மனுஷனுக்கு அந்தபத்து நிமிஷம் நேரம் கூட இல்லையே.. எல்லாமே வேகம்…   சாப்பாடு வேக வைக்கிறதுல தொடங்கி, சாப்பாடு பரிமாறுதலிருந்து, இலையை எடுக்கிற வரைக்கும் எல்லாமே அவசரம்… குறிப்பா நான் சாப்பிடும்போது கவனிச்சிருக்கேன்…..பரிமாறும் பொழுது முதல் சாம்பார சாப்பிட்டு முடிகிறதுக்குள்ளஅடுத்த காரக்குழம்பு, அடுத்த ரசம், அடுத்து மோர்ன்னு கொண்டு வந்து முன்னாடிநீட்டி சீக்கிரம், சீக்கிரம் ஆகட்டும், அப்படிங்குற மாதிரியே, அவங்க பரிமாற வேகத்திலேயே நம்ம சாப்பிட வச்சுடுவாங்க… (ஒட்டுமொத்த நாலு நிமிஷத்துல…)

பக்கத்துல இருக்குற இளவட்ட புள்ள சீக்கிரம் சாப்பிட்டு இலையை மூட பந்தியோட நாகரிகம் கருதி ஒட்டுமொத்த பயலும் பாதி சாப்பாட்டை விட்டு இலையை மூடி வச்சிட்டு கைகழுவ போய்டுவாங்க…

ஒருவேள நீங்க அவசரப்படாம இருந்தா அந்தஒட்டுமொத்த சாப்பாட்டையும் அவங்க சாப்பிட்டு இருப்பாங்களே என்னவோ… எப்படி பார்த்தாலும் அந்த 40% சாப்பாடு வேஸ்ட்…எப்படியோப்பா யார் மேல குற்றம் சொல்றதுன்னு தெரியல….இந்த அவசர உலகத்துல யாரு மேல இந்த கோபத்தை காட்ட… உணவு வீணடிப்பது எவ்வளவு பெரிய கஷ்டம்ன்னு ஒரு விவசாயிகிட்ட போய் கேட்டு பாருங்க… மிச்ச கதைய…கொஞ்சம் பொறுமையா இருந்தா… எல்லாத்தையும் சாதிக்கலாம்.

அப்படி மிச்சம் பண்ற சாப்பாட்ட பக்கத்திலஇருக்கிற ஆசிரமத்திற்கோ ஏதோ ஒரு இல்லாதப்பட்டவங்களுகோ கொடுத்து உதவலாம். இல்ல..எந்த பக்கம் நின்னு யோசிச்சு பார்த்தாலும் சாப்பாடு மட்டும் வேஸ்ட் ஆகுது… இத கொஞ்சம் மனசுல வச்சுக்கோங்க…  இனியாவது இந்த உணவு வீணடிப்பு இல்லாம எப்படி இந்த உணவை மேலாண்மை செய்யலாம்னு யோசிச்சு பாருங்க…சாப்பாட்டில உங்க கௌரவத்தை பார்க்கிற நீங்க… அதை வீணடிப்பது கூட உங்ககவுரவமா? தயவு கூர்ந்து கொஞ்சம் யோசிங்க.

(குமுறல்கள் நிலா ரசிகன்)

 

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.