ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக Vs அதிமுக – வெற்றி வாய்ப்பு யாருக்கு ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவையொட்டி, அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தற்போது அனைத்துக் கட்சிகளின் பிரச்சாரமும் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. வரும் பிப்.27 வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச்சு 2ஆம் நாள் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

உண்மையில் 2 முனைப்போட்டி

ஈரோடு கிழக்குச் சட்டமன்றத் தொகுதி சுமார் 2.15 வாக்காளர்களைக் கொண்ட மாநகராட்சிக்குட்பட்ட பகுதியாகும். இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுகவில் தென்னரசு, தேமுதிகவில் ஆனந்த், நாம் தமிழர் கட்சியில் திருமதி மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இங்கு 4 முனைப்போட்டி இருந்தாலும் திமுக மற்றும் அதிமுக இடையேதான் கடுமையான போட்டி இருந்து வருகின்றது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

அதிமுகவின் பலவீமான பிரச்சாரம்

இச் சட்டமன்றத் தொகுதிக்குள் 33 மாநகராட்சி வார்டுகள் உள்ளன. இதில் 32 வார்டுகளில் திமுக கூட்டணி வென்றுள்ளது. ஒரு தொகுதியில் அதிமுக வென்றுள்ளது. இந்த இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியான அதிமுக ஆளும்கட்சியின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்கும் விதத்தில் பிரச்சாரத்தைப் பலப்படுத்தாமல் எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சிதான் பொற்கால ஆட்சி. திமுக மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று வலுவற்ற வாதங்களால் பிரச்சாரம் செய்துவருகிறார். இது அதிமுக தொண்டர்களிடையே சுணக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஈரோடு இடைத்தேர்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக கூட்டணியின் பலமான பிரச்சாரம்

திமுகவின் முதல்வர் தவிர்த்த அனைத்து அமைச்சர்களும் ஈரோட்டில் முகாமிட்டு இடைத்தேர்தலில் வெற்றிக்கனியைப் பறித்துவிடவேண்டும் என்ற முனைப்போடு பிரச்சாரம் செய்து வருகின்றனர். பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம், பால் விலை குறைப்பு, பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி குறைப்பு, கல்லூரி மாணவியருக்கு ரூ.1000 மாதக் கல்வி உதவித் தொகை போன்ற சாதனைகளைப் பட்டியலிட்டு வருகின்றனர். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் என்ற அறிவித்த தேர்தல் கால வாக்குறுதியும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

சீமான்
சீமான்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

சீமானின் சாதி பிரச்சாரம்

தேமுதிகவின் இளைஞர் அணி செயலாளர் சுதீஷ், விஜயகாந்த் மகன் பிரபாகரன், மனைவி பிரேமலதா ஆகியோர் பிரச்சாரம் செய்துவருகிறார்கள். நாம் தமிழர் கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்துவருகிறார். அனைத்துக் கட்சிகளையும் கேலியும் கிண்டலும் நகைச்சுவையோடு பிரச்சாரம் செய்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அவரின் வேட்பாளர் முதலியார் சமூகம் சார்ந்தவர் என்பதால் முதலியார் சமூக வாக்குகளைப் பெற்றுவிடவேண்டும் என்று “முதலியார் சமூகம் பண்டைகாலப் போர்க்களத்துக்கு முதலில் யார் செல்வது என்றபோது முதலில் சென்றவர்கள்தான் முதலியார்கள்” என்று வரலாற்றில் இல்லாத குறிப்புகளைச் சொல்லி மக்களைச் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

வெற்றி வாய்ப்பு – கருத்துக்கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தல் களம் யாருக்குச் சாதகமாக உள்ளது என்பதை அண்மையில் வெளிவந்த கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. “வரும் பிப்.27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் வெல்வார் என்பது குறித்துக் கள ஆய்வை நடத்தியுள்ள லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இதில் திமுக கூட்டணியில் இருந்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 42-49% வாக்குகளைப் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல அதிமுக வேட்பாளர் தென்னரசு 31-36% வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.ந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் சார்பில் மேனகா களமிறங்கும் நிலையில், அவர் 6-10% வாக்குகளைப் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தேமுதிக, நோட்டா மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் இணைந்து 5% வாக்குகளைப் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ops_eps
ops_eps

ஓபிஎஸ் – இபிஎஸ் இடையேதான் போட்டி

தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்துத் தேர்தல் ஆய்வாளர் இரவீந்திரன் துரைசாமி கூறும்போது,“இந்தத் தேர்தல் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே நடக்கும் தேர்தல் அல்ல. இரண்டுபட்டுள்ள எதிர்க்கட்சியான அதிமுகவின் தலைமையைக் கைப்பற்றுவது அல்லது தக்கவைத்துக்கொள்வது போவது ஓபிஎஸ்ஆ – இபிஎஸ்ஆ என்பதை முடிவு செய்யும் வித்தியாசமான தேர்தல் இது. இடைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சி வெற்றிபெறுவது என்பது எழுதப்படாத விதியாகவே உள்ளது. திமுக பதிவாகும் வாக்கில் சுமார் 60% வாக்குகளைப் பெற்று வெற்றிபெறும். 30% வாக்குகளை அதிமுக பெறும். நாம் தமிழர் கட்சி, தேமுதிக கட்சிகள் 10% வாக்குகளையும் பெறும். அதிமுகவின் ஏற்பட்டுள்ள பிளவும், பாஜகவிடம் அதிமுகவின் இருஅணிகள் சரண் அடைந்திருப்பதும் அதிமுக தொண்டர்களிடையே மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் திமுக கூட்டணிக்குச் சாதகமாகவே தற்போது அமைந்துள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகளால் தமிழ்நாட்டு அரசியலில் எந்த மாற்றமும் வந்துவிடாது என்பதும் கவனிக்க வேண்டிய செய்தியாகும்.

ஆதவன்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.