அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நன்றி சொல்ல உமக்கு… வார்த்தை இல்லை எங்களுக்கு…

0

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

நன்றி சொல்ல உமக்கு… வார்த்தை இல்லை எங்களுக்கு…

கரூர், திருமாநிலையூர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர் ஆகிய இடங்களில் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது.  திருச்சி அருகே அல்லூர் பகுதியில் முதல்வரின் வாகனம் சென்று கொண்டு இருந்த போது 100க்கு மேற்பட்ட பெண்கள் கூட்டமாக  வெளியே வந்து கொண்டு இருந்தனர்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

2026 June 11 - 17 Angusam Book

முதல்வர் வாகனம் செல்வதை பார்த்ததும் அந்த வாகனம் முன்பு சென்றனர். உடனே வாகனத்தை நிறுத்தச் சொன்ன முதல்வர் அவர்களிடம் வணக்கம் தெரிவித்துக் கொண்டே, “எப்படி இருக்கீங்க” என்று நலம் விசாரித்தார்.

அங்கிருந்தவர்களில் வனிதா என்பவர் (இவர் சேவை ஆயத்த ஆடை மையத்தின் ஒருங்கிணைப்பாளர்)  முதல்வர்  வேனுக்கு முன்னே சென்று.. “உங்களை மாதிரி யாருமே ஆட்சி பண்ண முடியாது சார்..! எங்களுக்கு எல்லாம் பெரிய உதவி பண்ணியிருக்கீங்க சார்… ரொம்ப நன்றி சார்.” என்று சொன்னவர்களை பார்த்து முதல்வர், “எங்கிருந்து வரீங்க” என்று கேட்க, உடனே வனிதா, ”நாங்க எல்லோரும் இங்க இருக்கிற சேவை ஆயத்த ஆடை பயிற்சி மையத்தில வேலை செய்கிறோம். இந்த மையத்திற்கு குளித்தலை உள்ளிட்ட பகுதியில் இருந்து வேலைக்கு வருகிறார்கள் சார். அவர்கள் தினமும் அரசாங்க பேருந்துல இலவசமா வந்து தினமும் ரூ.400 வரை சம்பாதிக்கிறார்கள்.  இது எல்லாமே உங்களால் தான் சாத்தியம் ஆனது சார், அதற்காக  நன்றி சொல்கிறோம்..” என்று சால்லையை பூரிப்போடு கொடுத்து நன்றி சொன்னார். முதல்வர் ஸ்டாலினும் அவர்களின் நன்றியை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.