அங்குசம் பார்வையில் வெப்பன் !

மெடிசன் ஃபார்முலாவைத் தேடி, வில்லன் விஞ்ஞானியான ராஜீவ்மேனனும் வெறி கொண்டு அலைகிறார். அதன் பின் நடக்கும் ஆயுத ஆட்டம் தான் இந்த ‘வெப்பன்’`.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அங்குசம் பார்வையில் வெப்பன் !

தயாரிப்பு: ‘மில்லியன் ஸ்டுடியோஸ்’ எம்.எஸ்.மன்சூர். டைரக்‌ஷன்: குகன் சென்னியப்பன். ஆர்ட்டிஸ்ட்ஸ்: சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப், ராஜீன் மேனன், யாஷிகா ஆனந்த், ராஜீவ் பிள்ளை, மைம் கோபி, கஜராஜ், கனிஹா, வினோதி வைத்தியநாதன், பரத்வாஜ் ரங்கன், வேலு பிரபாகரன். டெக்னீஷியன்கள்—ஒளிப்பதிவு: பிரபுராகவ், இசை: ஜிப்ரான், எடிட்டிங்: கோபி கிருஷ்ணா, வி.எஃப்.எக்ஸ்: கோகுல் ஆர்ட் டைரக்டர்: சுபேந்தர். பி.ஆர்.ஓ.சுரேஷ் சந்திரா & அப்துல்நாசர்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

ந்திய சுதந்திரப் போர் நடக்கும் போது, நமது நாட்டு ராணுவத்திற்கு ஆயுதங்கள் கேட்டு ஜெர்மனியின் ஹிட்லரைச் சந்திக்கிறார்கள் நேதாஜி  சுபாஷ் சந்திரபோஸும் செழியனும். அப்போது ஹிட்லர், தன்னிடம் உள்ள சூப்பர் ஹியூமன் பவர்  மெடிசனை உட்கொண்டால், எப்பேர்ப்பட்ட வலிமையுள்ள ஆயுதங்களையும் எதிர்க்கும் சக்தி கொண்ட மனிதர்கள் உருவாகக்கூடிய  அந்த மெடிசன் ஃபார்முலாவைத் தருகிறார்.

அந்த ஃபார்முலாப்படி மனிதர்களை உருவாக்குவதற்கு  முன்பாகவே இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதால், அதைப் பயன்படுத்தவில்லை போஸ். ஆனால் செழியனோ, அந்த ஃபார்முலாவை ரகசியமாக பாதுகாக்கிறார். இதைத் தெரிந்து கொண்ட இந்திய ராணுவத்தினர், செழியனையும் அவரது மனைவி, மகன்களையும் சுட்டு, வீட்டையும் குண்டு போட்டுத் தகர்க்கிறார்கள். ஆனால் செழியனோ, உயிருக்குப் போராடும் இறுதி நேரத்தில் அந்த மெடிசனை தனது மகன்களில் ஒருவனுக்கு செலுத்திவிடுகிறார். முதல் பத்து நிமிடங்களிலேயே இந்த வெப்பனுக்கான காரணத்தை கச்சிதமாகச் சொல்லிவிட்டார் டைரக்டர் குகன் சென்னியப்பன்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

அதே மெடிசன் ஃபார்முலாவைத் தேடி, வில்லன் விஞ்ஞானியான ராஜீவ்மேனனும் வெறி கொண்டு அலைகிறார். அதன் பின் நடக்கும் ஆயுத ஆட்டம் தான் இந்த ‘வெப்பன்’`.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தேனி மலைப்பகுதியில் இருக்கும் ஒன்றிய அரசுக்குச் சொந்தமான நியூட்ரினோ ஆய்வு மையத்தில் குண்டு வெடிப்பு நடக்கிறது. இதற்காக வசந்த் ரவியை தூக்கி வந்து விசாரிக்கிறது தேசிய பாதுகாப்புப்படை. வசந்த் ரவியோ தான் ஒரு யூடியூப்பர் என்கிறார். அதன் பின் வசந்த்ரவியின் லவ்வர் தான்யா ஹோப்பும் சிக்குகிறார். இருவர் சொல்லும் ஃப்ளாஷ்பேக் தான் இடைவேளை வரை நகர்கிறது. இடைவேளை விடுவதற்கு கால் மணி நேரம் முன்பாகத்தான் சத்யராஜ் எண்ட்ரியாகிறார். அவருக்குள் இருக்கும் அசுரத்தனமான ஆற்றல், இவர் தான் செழியன் மகன் என்பதை கன்ஃபார்ம் பண்ணுகிறது.

வசந்த் ரவிக்கு இது முற்றிலும் மாறுபட்ட படம், சற்று குவாலிட்டியான படமும் கூட. சத்யராஜின் மகன் தான் வசந்த் ரவி என்பதை இடைவேளைக்குப் பின் ஸ்கிரிப்டில் கனெக்ட் பண்ணிவிட்டார் டைரக்டர் குகன் சென்னியப்பன். தான் ஏன் காட்டுக்குள் தனிமையில் வசிக்கிறேன் என்பதை வசந்த்ரவியிடம் சத்யராஜிடம் சொல்லும் ஃப்ளாஷ்பேக், எமோஷனல் ஏரியாவுக்கு கச்சிதமாக மேட்ச் ஆகியிருக்கு.

ராஜீவ் மேனனின் வில்லன் மேனரிசம் ரொம்பவே ஸ்டைலிஷாகவும் இருக்கு, மிரட்டலாகவும் இருக்கு. பாடல்களுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லையென்றாலும் பின்னணி இசையால் மிரள வைக்கிறார் ஜிப்ரான்.

இந்தப் படத்தின் மிக முக்கிய உழைப்பாளிகள் என்றால் ஆர்ட் டைரக்டர் சுபேந்தரும் வி.எஃப்.எக்ஸ். கோகுலும் தான். ராஜீவ் மேனனின் ரிசர்ச் செண்டரையும் சில துப்பாக்கிகளையும் லேட்டஸ்டாக வடிவமைத்துள்ளார்கள் இருவரும். படம் இரண்டு மணி நேரம் தான். ஆனால் திரைக்கதையின் வடிவமைப்பில் தேக்கம் நிறைந்திருப்பதால் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக ஓடுவது போல் இருக்கிறது.

ஆனாலும்  ஹாலிவுட் தரத்தைப் போல இருக்க வேண்டும் என்பதற்காக தனது கடுமையான உழைப்பைக் கொட்டி, பழைய தரவுகளை அலசி ஆராய்ந்து நல்ல விஷுவல் ட்ரீட் கொடுத்தற்காக  டைரக்டர் குகன் சென்னியப்பனையும் இவருக்குத் துணை நின்ற தயாரிப்பாளர் மன்சூரையும் பாராட்டலாம்.

மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.