தள்ளு மாடல் வாகனங்களுக்கு ஆப்பு… மத்திய அரசு அதிரடி உத்தரவு.. போக்குவரத்துக் கழகங்கள், அரசுத்துறை வாகனங்களுக்கு சிக்கல்…

0

தள்ளு மாடல் வாகனங்களுக்கு ஆப்பு… மத்திய அரசு அதிரடி உத்தரவு.. போக்குவரத்துக் கழகங்கள், அரசுத்துறை வாகனங்களுக்கு சிக்கல்…

மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், 15 வருடத்திற்கு மேல் தற்போது வரை பயன்பாட்டில் உள்ள அரசு துறை வாகனங்களை உடனடியாக உடைத்து அழிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது . இந்த உத்தரவால் மாநில போக்குவரத்து கழகங்கள் மற்றும் அரசுத் துறை வாகனங்கள் செயல்பாட்டில் சிக்கல் ஏற்படும் அபாய நிலை உருவாகியுள்ளது

மத்திய அரசு சார்பில் வாகன பயன்பாட்டு கொள்கை என்ற புதிய கொள்கை ஒன்று அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை மத்திய அரசு அனுப்பி உள்ளது.

அரசுத்துறை வாகனங்கள்
அரசுத்துறை வாகனங்கள்
- Advertisement -

- Advertisement -

அந்த சுற்றறிக்கையில் அந்தந்த மாநிலங்களில் 15 வருடங்கள் முடிந்தும் பயன்பாட்டில் உள்ள அரசுத்துறை வாகனங்களை உடனே அழிக்க வேண்டும். காற்று மாசுவை குறைத்தல், சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற அம்சங்களுக்காக 15 வருடங்கள் முடிந்த பின்னரும் பயன்பாட்டில் இருக்கும் எல்லா அரசுத்துறை வாகனங்களையும் உடனே அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும்.
அந்த வாகனங்களை முற்றிலுமாக உடைத்து, பொருட்களை அப்புறப்படுத்தி வாகனத்தால் ஏற்படும் இடர்பாடுகளை நீக்க வேண்டும்.

இது குறித்து அந்தந்த மாநில அரசுகள் தங்களிடம் பயன்பாட்டில் உள்ள பழைய வாகனங்கள் குறித்த விவரங்களையும் அவை அழிக்கப்பட்டதா என்ற விவரங்களையும் மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு மத்திய அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசுத்துறை வாகனங்கள்
அரசுத்துறை வாகனங்கள்

மத்திய அரசின் இந்த உத்தரவால் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் போக்குவரத்து கழகங்கள் மற்றும் அரசு துறை வாகனங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பொது பேருந்து சேவை என்ற இனத்தில் அந்தந்த மாநில அரசுகள் சார்பிலான போக்குவரத்து கழகங்கள் மூலம் பொதுமக்களுக்கு பேருந்து சேவை வழங்கப்படுகிறது.
பொது போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் பெரும்பாலான பேருந்துகள் ஓட்டவே தகுதியற்றவை என்ற நிலையில்தான் பல மாநிலங்களில் உள்ளன.

தமிழகத்தை பொறுத்த வரை தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகத்தின் 8 மண்டலங்கள் வாயிலாக பொது பேருந்து சேவை வழங்கப்படுகிறது. சுமார் 22 ஆயிரம் பேருந்துகள் மூலம் நாளொன்றுக்கு 2 கோடி பேர் வரை பொதுபேருந்து சேவையை பெறுகின்றனர்.

அரசுத்துறை வாகனங்கள்
அரசுத்துறை வாகனங்கள்

அரசுப்பேருந்துகளின் ஆயுட்காலம் என்பது கடந்த காலங்களில் 5 ஆண்டுகள் 3 மாதங்கள் என்று இருந்தது. அல்லது அந்த பேருந்து நாளொன்றுக்கு இயக்கப்படும் கி.மீ அடிப்படையில் பேருந்தின் ஆயுட்காலம் நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் பேருந்து சேவை அதிகம் தேவை என்ற நிலையில் பேருந்துகளின் ஆயுட்காலத்தை 9 ஆண்டுகளாக மாற்றி அரசு உத்தரவிட்டது. அந்த 9 ஆண்டுகளையும் தாண்டி பல பேருந்துகள் இன்று வரை பயன்பாட்டில் உள்ளன.

4 bismi svs
அரசுத்துறை வாகனங்கள்
அரசுத்துறை வாகனங்கள்

ஊழியர் சம்பளம், பல வகை இலவச பாஸ், கொள்முதலில் முறைகேடுகள், தேவையற்ற அதிகாரி பணியிடங்கள் அவர்களுக்கான சம்பளம் இதர செலவினங்கள், கோர்ட் கேஸ், இழப்பீடு என்று பல்வேறு காரணங்களால் அரசுப்போக்குவரத்துக் கழகங்கள் பல்லாயிரம் கோடி கடனில் இயக்கப்பட்டு வருகின்றன. இது போன்ற நிலையில் மத்திய அரசின் புதிய உத்தரவு தமிழக அரசுப்போக்குவரத்துக்கழகங்களை வெகுவாக பாதிக்கும்.

அதே போல மாநில அரசின் கட்டுப்பாட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் , துறை பயன்பாடுகள் என்று வாகனங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதில் காவல் துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய்த்துறை, தீயணைப்பு துறை, போன்ற அத்யாவசிய துறைகளுக்கு அதிக அளவில் வாகனங்கள் ஒதுக்கப்படுகின்றன.

அரசுத்துறை வாகனங்கள்
அரசுத்துறை வாகனங்கள்

அதே போல அரசின் இதர துறைகளுக்கும் தேவைக்கேற்ப வாகனங்கள் ஒதுக்கப்படுகின்றன. போக்குவரத்துக்கழக பேருந்துகள் தவிர இதர துறை வாகனங்கள் யாவும் அரசால் இயக்கப்படும் வாகன பணிமணைகளில் பழுதுகள் நீக்கம் செய்யப்பட்டு இயக்கப்படுகிறது. இவ்வாறான அரசுத்துறை பயன்பாட்டில் உள்ள வாகனங்களில் பெரும்பாலான வாகனங்கள் புகை மாசு விதிகளுக்கு எதிரான நிலையில் அதாவது தள்ளு மாடல் வண்டிகளாகத்தான் இன்றளவும் களத்தில் உள்ளன.

இது போன்ற வாகனங்களை குறி வைக்கும் வகையில்தான் மத்திய அரசின் புதிய உத்தரவு வெளியாகி உள்ளது.

அரசுத்துறை வாகனங்கள்
அரசுத்துறை வாகனங்கள்

இந்த உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்படும் பட்சத்தில் பல துறைகளில் வாகன பற்றாக்குறை ஏற்படும், பொது பேருந்து சேவையும் பாதிக்கப்படும் என்பதே நிதர்சனமாகும்.

 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் வாகனங்கள் நிலை குறித்த ஆய்வறிக்கை ஒன்றை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி சாலைகளின் மோசமான தரம், மத்திய அரசின் புதிய கொள்கை,
மாற்று எரிபொருள் வாகனங்களை பயன்படுத்த வேண்டிய நிலை, போன்ற காரணங்களால்

அரசுப்பேருந்துகளின் ஆயுட்காலங்கள் மாற்றி அமைக்க ப்படுகிறது. அதன்படி தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் ஆயுள் காலம் ஏழு ஆண்டுகள் என்று நிர்ணயிக்கப்படுகிறது ஏழு ஆண்டு காலம் அல்லது 12 லட்சம் கிலோமீட்டர் இதில் எது முன்பு வருகிறதோ அத்துடன் அந்த பேருந்தின் ஆயுள் காலம் நிறைவு வரும். அதேபோல தமிழ்நாடு அரசு இதர போக்குவரத்துக் கழக பேருந்துகளின் ஆயுள் காலம் 9 ஆண்டுகள் அல்லது மொத்தம் 12 லட்சம் கிலோமீட்டர்.

அரசுத்துறை வாகனங்கள்
அரசுத்துறை வாகனங்கள்

இதில் எது முன்பாக வருகிறதோ அத்துடன் அந்த பேருந்தின் ஆயுள் காலம் முடிகிறது இவ்வாறு பேருந்துகளின் ஆயுள் காலம் குறித்து தமிழ்நாடு அரசு முடிவு செய்து அதற்கான அரசாணை சமீபத்தில் வெளியிட்டது .
ஆனால் தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வாகன கொள்கையால் தமிழக அரசு போக்குவரத்து கழக வாகனங்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்படும் என்பது திட்ட வட்டமாக தெரிவது குறிப்பிடத்தக்கது.

-அரியலூர் சட்டநாதன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.