‘மெஸன்ஜர்’ படத்தின் மெசேஜ் என்ன?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா.விஜயன் தயாரித்திருக்கும் படம் ‘மெஸன்ஜர்’. இதில் ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் கன்னிமாடம், யுத்தகாண்டம் பாத்திரகாட் (மலையாளம்) போன்ற படங்களில் கதாநாயகனாகவும் சில வாரங்களுக்கு முன்பு ரிலீஸான ‘சார்’ படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்திருக்கிறார். கதாநாயகிகளாக மனீஷா ஜஸ்னானி, ஃபாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ராஜ்குமார் , ஜீவா ரவி, யமுனா, கோதண்டன், இட்இஸ் பிரசாந்த், கூல்சுரேஷ், ராஜேஷ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் இலங்காமணி. இவர் இயக்குனர் A.R. காந்தி கிருஷ்ணா மற்றும் இயக்குனர் பத்ரி ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

மெஸன்ஜர் திரைப்படம்ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ஶ்ரீராம் கார்த்திக் காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அப்போது அவரது முகநூலில் இருக்கும் மெஸன்ஜரில் ஒரு பெண் மெசேஜ் செய்து அதை தடுக்கிறாள். அவளுக்கு எப்படி தான் தற்கொலை செய்யப் போவது தெரியும் என அவளிடமே மெசேஜ் செய்து ஶ்ரீராம் கார்த்திக் கேட்கும் போது ‘தான் இறந்து விட்டதாக’ சொல்கிறார். இறந்த பெண்ணொருவர் தன் உயிரை எப்படி காப்பாற்றினார்? அந்தப் பெண் யார் ? என்பதற்கு ஶ்ரீராம் கார்த்திக் விடை தேடி செல்வதே இந்த மெஸன்ஜரின் கதை. ஃபேண்டஸி லவ் ஸ்டோரி பாணியில் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

மெஸன்ஜர் திரைப்படம்
மெஸன்ஜர் திரைப்படம்

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

பால கணேசன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு எடிட்டிங் பிரசாந்த், இசை அபு பக்கர், ஆர்ட் டைரக்டர் பாலசுப்ரமணியன். தக்ஷன் மற்றும் பிரசாந்த் பாடல்கள் எழுத சைந்தவி, சத்யபிரகாஷ், மற்றும் கபில் கபிலன் பாடியிருக்கிறார்கள். பிஆர்ஓ: சதீஷ்.

விக்ரவாண்டி அதன் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் சென்னையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ரிலீசுக்கு தயாராகி இருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. விரைவில் டீசர் மற்றும் டிரைலரை படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள்.

 

 – மதுரை மாறன்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.