நில உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்தவர் மீது எப்ஐஆர் ;  தாசில்தார் மீது நடவடிக்கை எப்போது ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அங்குசம் செய்தி எதிரொலி ! நில உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்தவர் மீது எப்ஐஆர் ;  தாசில்தார் மீது நடவடிக்கை எப்போது ? ” பட்டாவில்  பெயர் சேர்க்க, நீக்க  லஞ்சம் ? – தில்லாலங்கடி தாசில்தாரை விசாரிக்க ஐகோர்ட்  உத்தரவு”   என்ற தலைப்பில் அங்குசம் செய்தி வெளியிட்டிருந்தது. இதன் எதிரொலியாக தாசில்தார் தூண்டுதலில் பேரில்  மிரட்டல் விடுத்த , அபுபக்கர் சித்திக் என்பவர் மீது  ஜோலார்பேட்டை  காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிந்தது ….

அந்த மனுவில் , திருப்பத்தூர் மாவட்டம்   ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமாத்தை  சேர்த்தவர் ஒப்பந்ததாரர் குமரேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “ஏலகிரி மலை  அத்தனாவூர் கிராமத்தில் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை அபகரிக்கும் நோக்கில், எனக்கான தனிபட்டாவில், கோவிந்தராஜ் என்பவரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு  எனது தனி பட்டாவில் அவரின் பெயரை  கூட்டுப்பட்டாவாக  சேர்த்துவிட்டதை நீக்க கோரி முறையிட்டேன் அதற்கு   ரூ. 20 லட்சம்  பணம் கேட்டதாக தாசில்தார் சிவப்பிரகாசம் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

ஜோலார் பேட்டை காவல் நிலையம்
ஜோலார் பேட்டை காவல் நிலையம்

இதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி கடந்த  2023 நவம்: 25 தேதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. கே. இளந்திரையன்  புகார் குறித்து மனுதாரருக்கும். தாசில்தாருக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு 12 வாரங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என  அப்போதைய திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கரபாண்டியனுக்கு உத்தரவிட்டிருந்தார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இதில்  விசாரணை நடத்திய திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அந்த புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு அனுப்பி வைத்துள்ளதாக  தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்  தனது புகாரை லஞ்ச ஒழிப்புத் துறையிடமிருந்து திரும்பப்பெறுமாறு   திருப்பத்தூரில் இருந்து மறுதலாகி தற்போது வாணியம்பாடி வட்டாட்சியராக பணிபுரியும் சிவப்பிரகாசம் ஏற்பாட்டின் பேரில்   கூலிப்படையினரை வைத்து வாட்சப்பிலும் ,  கடை ஊழியர்களிடமும் , உறவினர்களிடம்  கொலை மிரட்டல் விடுத்ததாக ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் குமரேசன்,

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

புகாரின் பேரில்  வட்டாட்சியர் சிவப்பிரகாசம் மீது   ஜோலார்பேட்டை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கூலிப்படை வைத்து மிரட்டிய நபர் மீதும் நடவடிக்கை இல்லை  எனவே, எனது புகாரை முறையாக விசாரிக்க ஜோலார் பேட்டை காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்

இதன் தொடர்ச்சியாக கடந்த மே – 31 அன்று, இந்த மனுவை  விசாரித்த நீதிபதி எஸ்.சவுந்தர், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் சிவப்பிரகாசத்திற்கு  எதிரான புகாரில் 3 வாரங்களில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜோலார்பேட்டை காவல் துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

அபுபக்கர் சித்திக்
அபுபக்கர் சித்திக்

இந்த உத்தரவை  “பட்டாவில்  பெயர் சேர்க்க, நீக்க  லஞ்சம் ? – தில்லாலங்கடி தாசில்தாரை விசாரிக்க ஐகோர்ட்  உத்தரவு”   என்ற தலைப்பில் அங்குசம் செய்தி வெளியிட்டிருந்தது.இதன் எதிரொலியாக ,கடந்த 14/6/2024;  அன்று  தாசில்தார் சிவப்பிரகாசம் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என  மிரட்டிய மின்வாரிய ஊழியரும் ,  நில புரோக்கருமான  அபுபக்கர் சித்திக் என்பவர் மீது,  397/2024 U/S 195(A), 506(1) IPC-  செக்ஷன்படி எப்ஐஆர்  போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து குமரேசன் கூறுகையில் இந்த நடவடிக்கையே தாமதம் தான் ஐகோர்ட் உத்தரவின் பேரில் தான் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. கொலை மிரட்டல் விடுத்து வழக்கு பதிந்துள்ள அபுபக்கர் சித்திக் மீது கைது நடவடிக்கை எப்போது  ? மின் வாரியத்தில் வேலை பார்க்கும் அவர் மீது  துறை ரீதியான நடவடிக்கை  எடுக்காதது ஏன் ?   தாசில்தார்,  சிவப்பிரகாசம் மீது  கோர்ட் உத்தரவிட்டும் , இன்னும் வழக்கு பதியாதது ஏன் ? விசாரனையே இல்லை ஏன்  ? என  அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

ஒப்பந்ததாரரே ஐகோர்ட்க்கு போய் தான் நடவடிக்கை எடுக்க உத்தரவு வாங்க முடிந்தது , இதே ஒரு சாமானியராக இருந்திருந்தால் ? ஜோலார்பேட்டை போலீசும் வாணியம்பாடி தாசில்தார் எத்தனை சாமானியர்களை வஞ்சித்து இருப்பார்கள்.

– மணிகண்டன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.