எங்க உயிருக்கு மதிப்பில்லையா? கதறும் போலிஸ் !
எங்க உயிருக்கு மதிப்பில்லையா?
மலைக்கோட்டை மாநகரில் தஞ்சை மெயின்ரோட்டில் உள்ள காவல்நிலையத்துக்குட்பட்ட பகுதியில்; போதையில் மீன் வியாபாரி ஒருவர் ரகளை செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து அறிந்;த பீட் ஏட்டு ஒருவர் அங்கு சென்று அவரை கண்டித்தார். ஏட்டு வாட்டசாட்டமாக இருந்ததை பார்த்து பதுங்கிய போதை ஆசாமி, வீட்டிற்குள் புகுந்து மீன் வெட்டும் கத்தியை எடுத்து வந்து, அவரது வலது மற்றும் இடது புற காது பகுதியில் வெட்டினார்.
வெட்டு வாங்கியும் விரட்டிய ஏட்டுவால் அவரை பிடிக்க முடியவில்லை. சென்னையில் ரவுடி ஒருவர் போலீசாரை தாக்கியதை அடுத்து என்கவுண்டர் நடத்தப்பட்டது. இதில் ஏட்டையா கத்தியால் வெட்டப்பட்ட சம்பவத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்கள் உயிருக்கும் மதிப்பு கொடுங்கள் என போலீசார் கோரஸாக கோரிக்கை விடுக்கின்றனர்.