வக்கீல் கொலை வழக்கு பின்னணியில் யார்..? 4 கோணங்களில் துப்பறியும் திருச்சி போலீஸ்..
வக்கீல் கொலை வழக்கு பின்னணியில் யார்..? 4 கோணங்களில் துப்பறியும் திருச்சி போலீஸ்..
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கீழபுதூரைச் சேர்ந்த ஹேமந்த்குமார் என்ற இளைஞர் அரியமங்கலத்தில் உள்ள தோப்பு ஒன்றில் குடிபோதையில் இருந்தபோது மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த படுகொலையில் திருச்சி பீம நகரை சேர்ந்த வழக்கறிஞர் கோபி கண்ணனுக்கும் தொடர் உள்ளதாக அப்போது கூறப்பட்டது.
நீதிமன்றத்தில் இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்று 09/05/2021 மாலை வீட்டுக்கு முன் தனது மகளுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுத்து கொண்டிருந்தபோது அப்போது மறைந்திருந்து கோபி கண்ணனை நோட்டமிட்டுக் கொண்டிருந்த கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு செஷன் கோர்ட் காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் கோபி கண்ணன் கொலையை நான்கு கோணங்களில் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
1- வழக்கறிஞர் கோபிகண்ணன் அரியமங்கலத்தில் நடந்த ஹேமந்த் குமார் கொலை வழக்கு தொடர்பாக அவர்களது நண்பர்கள் முன்பகை காரணமாக கொலை செய்திருக்கலாம் என்றும்,
2- நீதிமன்றத்தில் உள்ள கோபி கண்ணன் மீதான கொலை வழக்கு முடிவுக்கு வரும் நிலையில் தனது அண்ணனின் இறப்புக்கு காரணமான வக்கீல் தப்பித்து விடுவார் என்று கோயம்புத்தூரில் உள்ள ஹேமந்த் குமாரின் தம்பி ஆட்களை வைத்து இச்சம்பவத்தை செய்திருக்கலாம் என்றும்,
3- அல்லது சமீபத்தில் திருச்சி உறையூரில் நிலம் வாங்கி விற்றதில் கோபி கண்ணன் ஈடுபட்டு ரியல் எஸ்டேட் புரோக்கருக்கு கொடுக்கவேண்டிய 10 லட்சம் பணத்தை கொடுக்க மறுத்து தகராறு ஏற்பட்டதில் கூலிப்படையை ஏவி சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்றும்,
4) ஹேமந்த் குமாரின் தம்பி கோயம்புத்தூரில் உள்ள நபர் திருச்சி வந்து கொலையை செய்துவிட்டு சென்றிருக்கலாம் என்று நான்கு கோணங்களில் திருச்சி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
–ஜித்தன்