சிறுவர்களை மைனர் கொலைகாரர்களாக உருவாக்குவது யார் தெரியுமா ? அதிர்ச்சி ரிப்போர்ட்..
சிறுவர்களை மைனர் கொலைகாரர்களாக உருவாக்குவது யார் தெரியுமா ? அதிர்ச்சி ரிப்போர்ட்..
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பார்கள். ஆனால் சமீபகாலமாக தமிழகத்தில் திருச்சி உள்ளிட்ட பெரும் நகரங்களில் நடக்கும் பெரும் குற்றச் செயல்கள் அனைத்திலும் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களே பெரும்பாலும் ஈடுபடுகின்றனர். இப்படி கிரிமினல் சிறுவர்கள் உருவாக்கப்படுகிறார்களா அல்லது சூழ்நிலை அவர்களை மாற்றி அமைக்கின்றதா என்று ஆராய்ந்து பார்த்தால் பெரும்பாலும் குழந்தைகள் சூழ்நிலைகளே அவர்களது வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது..என்பதுதான் உண்மை.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஜே ஜே பி (JJB- Juvenile Justice Board) ஒருங்கிணைப்பாளர் யோவான் சாமுவேலிடம் பேசியபோது…. சமீபகாலமாக இளம் குற்றவாளிகள் அதிகரித்திருப்பது உண்மையே இந்த கொரோனோ ஊரடங்கு காலத்தில் பலர் இளம் குற்றவாளிகளாக உருவெடுத்து இருக்கின்றனர். மீண்டும் மீண்டும் குற்ற சம்பவங்கள் ஈடுபடுவதும் அதிகரித்திருக்கின்றன. இப்படி குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்களை நாங்கள் அவர்களுக்கு தனிப்பட்ட ஆலோசனை வழங்கி பல்வேறு வகையில் அவர்களது வாழ்க்கையை மாற்ற முயற்சித்து வருகிறோம்.
ஆனால் தற்போது அவர்களுடைய பொருளாதார சூழல் குடும்ப பின்னணியில் போதைப் பழக்கம் போன்ற காரணங்களால் குற்றச் சம்பவங்கள் சிறார்கள் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.
அப்படி குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் எங்கெங்கோ சுற்றித் திரியும் சிரழிகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தற்போது புதிய சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு காவலில் உள்ளனர் இதில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் ஐந்து பேரும் அடக்கம் என்றும் கூறினார்.
இதுதொடர்பாக மாநில குழந்தைகள் உரிமை ஆணைய முன்னாள் உறுப்பினர் மோகன் கூறியபோது..
கொரானா ஊரடங்கு காலங்களில் பெரும்பாலும் குற்றச்செயல்களில் குழந்தைகள் ஈடுபடுவது அவர்களது பொருளாதார சூழ்நிலை ஒரு பக்கம் இருந்தாலும், அவர்களை தவறான வழியில் வழி நடத்தும் நபர்களாலும் சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். திருச்சி பொறுத்தவரை சிறுவர்களை தவறான வழிக்கு கொண்டு செல்லும் நபர்களை ஒவ்வொரு பகுதியாக காவல்துறையுடன் இணைந்து நாங்கள் கண்காணித்து வருகிறோம். சிறுவர்களை அடிதடி கட்டப்பஞ்சாயத்து அடியாட்களாக உட்படுத்துவது போதை பழக்கத்திற்கு உட்படுத்தி அவர்களை குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் இந்த கொரானா ஊரடங்கு காலங்களில் குழந்தை திருமணம் பாலியல் ரீதியாக குழந்தைகள் பாதிக்கப்படுவது என்பது பெருகி உள்ளது குறிப்பாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தைகள் 70% சதவிகிதம் உறவினர் வீட்டிற்கு செல்வதாலும் மற்றும் நம்பிக்கைகுரிய நபர்களால் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டு இருப்பது பெரும் வருத்தத்தை அளிக்கிறது.
தாரநல்லூர், வரகனேரி பீமநகர் ஸ்ரீரங்கம் கொண்டையன் பேட்டை நரியின் தெரு, டிரைனேஜ் தெரு, பூசாரி தெரு வெனிஸ் தெரு தேவதானம் பாலக்கரை ராம்ஜி நகர் கீழ கல்கண்டார் கோட்டை, வாமடம் நத்தர்ஷா பள்ளிவாசல் சுற்றியுள்ள பகுதிகள் போன்ற பகுதிகளில் சிறுவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி தொடர் குற்றச்செயல்களில் ஈடுகிறார்கள். இது குறித்து திருச்சி, மாநகர கவல்துறை உடனே விசாரணை நடத்தி கண்காணிக்க வேண்டும்.
-ஜித்தன், மெய்யறிவன்
திருச்சியில் பழிக்கு பழி மைனர் கேங்ஸ்டார் கொலைகள்.. !
https://angusam.com/minor-kenstar-killings-in-trichy-tit/