சூப்பர் ஸ்டார் ரிலீஸ் பண்ணிய ‘வித் லவ்’ ஃபர்ஸ்ட்லுக்!

’ஜியோன் பிலிம்ஸ்’ பேனரில் செளந்தர்யா ரஜினிகாந்தும் ‘எம்.ஆர்.பி.எண்டெர்டெய்ன்மெண்ட்’ பேனரில் நசரேத் பசிலியான், மகேஷ்ராஜ் பசிலியானும் இணைந்து தயாரிக்கும் படம் ‘வித் லவ்’.  சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மூலம் டைரக்டரான அபிஷன் ஜீவிந், இந்த ‘வித் லவ்’ மூலம் ஹீரோவாக புரமோட் ஆகியுள்ளார். இவருக்கு ஜோடியாக மலையாள சினிமாவின் அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படங்களில் இணை இயக்குனராக இருந்த மதன் இந்த ‘வித் லவ்’ மூலம் டைரக்டராக புரமோட் ஆகியுள்ளார்.

பெயர் வைக்காமல் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஷூட்டிங்கை ஆரம்பித்து… இப்போது ‘வித் லவ்’ டைட்டில் ஃபர்ஸ்ட்லுக்கை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

‘வித் லவ்’வின் ஒளிப்பதிவு : ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, இசை : ஷான் ரோல்டன், எடிட்டிங் : கே.சுரேஷ், ஆர்ட் டைரக்டர் : ராஜ்கமல், காஸ்ட்யூம் டிசைனர் : ப்ரியா ரவி, பி.ஆர்.ஓ. : யுவராஜ்.

—   ஜெ.டி.ஆர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.