‘வித் லவ்’ பிப்ரவரி 06 ரிலீஸ்!
ஜியோன் பிலிம்ஸ் சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த், எம்.ஆர்.பி. எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக புரமோட் ஆகியிருக்கும் படம் ‘வித் லவ்’ ( With Love ). ஹீரோயி னாக அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். ‘வித் லவ்’ வரும் பிப்ரவரி 06 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்போதைய இளைஞர்களின் வாழ்வை மையப்படுத்தி வெளியான படத்தின் டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, அசத்தலான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரிலீஸ் தேதியையும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் தான் ‘வித் லவ்’ மூலம் டைர்க்டராக புரமோட் ஆகியுள்ளார்.
இசை: ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு : ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, எடிட்டிங்: கே.சுரேஷ்குமார், கலை இயக்கம்: ராஜ்கமல் உடை வடிவமைப்பு:ப்ரியா ரவி
விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
— ஜெடிஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.