தேவை இருந்தும் சேவை இல்லை ! ஆதார் பதிவுக்காக அலைக்கழிக்கப்படும் அவலம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தேவை இருந்தும் சேவை இல்லை ! ஆதார் பதிவுக்காக அலைக்கழிக்கப்படும் அவலம் !

ஒட்டுமொத்த இந்தியர்களின் தரவுகளையும் சுமந்து நிற்கும் ஒற்றைச் சொல் ஆதார். பிறந்த குழந்தையிலிருந்து இறந்த பிறகு அடக்கம் செய்வதற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்ட காலம் இது. ஆதார் இல்லாமல் அரசின் எந்த சேவையையோ பலனையோ பெற்றுவிட முடியாது என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். ஆதார் இல்லாமல் இனி தெருவில் நடமாட முடியாத நிலை வந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

தற்போது, ”பத்துவருடங்களாக ஆதாரை புதுப்பிக்காமல் இருக்கிறீர்களா? உடனே புதுப்பித்துக்கொள்ளுங்கள் இல்லையெனில் ஆதார் காலாவதியாகிவிடும்” என்றொரு தகவலை கேட்டு ஆதார் மையங்களுக்குப் படையெடுக்கிறார்கள் சாமான்ய பொதுமக்கள்.

புதியதாக ஆதார் பதிவு செய்வது; பயோமெட்ரிக் பதிவு; புகைப்பட மாற்றம் உள்ளிட்ட சேவைகள் நீங்கலாக, முகவரி மாற்றம், கைப்பேசி எண் மாற்றம் உள்ளிட்ட சேவைகளை பெறுவதற்கு, தற்போது தடுக்கி விழுந்தால் ஒரு தனியார் இ-சேவை மையத்தில் விழலாம் என்ற அளவிற்கு கிராமங்கள் தோறும் மையங்களை விரிவுபடுத்தியிருக்கிறார்கள். அதில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

ஆதார் பதிவுக்காக அலைக்கழிக்கப்படும் அவலம் !
ஆதார் பதிவுக்காக அலைக்கழிக்கப்படும் அவலம் !

ஆனால், புதியதாக ஆதார் பதிவு செய்வது; பயோமெட்ரிக் பதிவு; புகைப்பட மாற்றம் உள்ளிட்ட சேவைகளை தற்போது அந்தந்த தாலுகா மையங்களில் உள்ள அரசு கேபிள் டிவி நிறுவனம் அல்லது எல்காட் சார்பில் இயங்கும் இ-சேவை மையங்களில் மட்டுமே பெறமுடியும். கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில வங்கிகளில் இந்த சேவையை வழங்கி வருகிறார்கள்.

ஒவ்வொரு தாலுகாவிலும் குறைந்தபட்சம் 30 கிராமங்களுக்கு குறைவில்லாமல் இருக்கும். பெரும்பாலான தாலுகா மையங்களில் பெயருக்கு ஒரே ஒரு ஆளை மட்டும் நியமனம் செய்து ஆதார் பதிவை நடத்திவருகிறார்கள். ஒருநாளைக்கு இத்தனை பேருக்குத்தான் டோக்கன் விநியோகம் செய்வோம் என வரம்பிட்ட சேவையைத்தான் வழங்கிவருகிறார்கள். அதுவும் சர்வரின் செயல்பாடுகளை பொறுத்து, காத்திருக்கும் ஒரு சிலருக்கு பதிவை மேற்கொள்கிறார்கள்.

இதற்கு முன்னரும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இதுபோன்ற புகார்கள் – கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன. ஆனாலும், எந்த ஒரு மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை.

நம் நேரடி கவனத்திற்கு வந்த சம்பவம் இது. பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா மையத்தில் ”தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின்” சார்பில் செயல்படும் ஆதார் பதிவு மையத்தில் நாள் ஒன்றுக்கு 25 டோக்கன் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிப்பே ஒட்டியிருக்கிறார்கள். ஆலத்தூர் தாலுகாவில் மட்டும் சிறியதும் பெரியதுமாக 39 கிராமங்கள் இருக்கின்றன. மேற்படி கிராமத்தைச் சேர்ந்த அத்தனை பேரும் இந்த ஒரு மையத்திற்குத்தான் வந்தாக வேண்டும்.

காலை பத்து மணிக்கு டோக்கன் கொடுக்கிறார்கள். பத்து மணிக்கு பத்து நிமிடம் காலதாமதமாக வந்தாலும் டோக்கன் கிடைக்காது. ஊழியரை கெஞ்சிக் கூத்தாடினால் அதிகபட்சம் இன்னும் 5 – 10 டோக்கன்களை கொடுக்கிறார். அதுவும், சர்வர் சரியா இருந்து 3.30 மணிக்குள் நேரம் இருந்தால்தான் பதிவு செய்ய முடியும். அப்புறம் டோக்கன் கொடுத்திட்டு ஏன் பதிவு செய்யலைனு என்கிட்ட வம்புக்கு வரக்கூடாதுனு கறாரான கண்டிப்புடன்தான் அந்த கூடுதல் டோக்கன்களையும் கொடுக்கிறார்.

ஆதார் பதிவுக்காக அலைக்கழிக்கப்படும் அவலம் !
ஆதார் பதிவுக்காக அலைக்கழிக்கப்படும் அவலம் !

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

முதல் 25 டோக்கன்களை எப்படியும் பெற்றுவிட வேண்டும் என்பதற்காக, காலை 7 மணி முதலாகவே பத்து பேர் காத்திருந்ததாக நம்மிடம் தெரிவித்தார்கள். அதுவும் முதல்நாள் காத்திருந்து பதிவு செய்ய முடியாமல், தற்போது இரண்டாவது நாளாக இந்த முயற்சியை எடுத்ததாக தெரிவித்தார்கள்.

அடுத்த விசயம், இந்தக் குறிப்பிட்ட சேவை மையம் இரூர் ஊராட்சிக்கு சொந்தமான சிமெண்ட் கிடங்கின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. அமர்வதற்கு இடம் கிடையாது. கொளுத்தும் வெயிலில் மர நிழலில் ஒதுங்கி நிற்பதைத் தவிர வேறு வழியில்லை. கைக்குழந்தைகளோடு வரும் பெண்களின் நிலை பரிதாபத்திற்குரியதுதான்.

ஆதார் பதிவு மற்றும் இ-சேவை மையம் தொடர்பான பணிகளுக்கு பொறுப்பான தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தனி தாசில்தார் பழனிசெல்வன் அவர்களிடம் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

“ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என்று சொன்னதால் தான் தற்போது எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதற்கு முந்தைய மாதங்களில் நாளொன்றுக்கு 10-15 பதிவுகள்தான் வந்து கொண்டிருந்தன. தற்காலிகமாகக்கூட ஆட்களை தன்னிச்சையாக நாங்கள் நியமித்துவிட முடியாது. ஆதார் நிறுவனத்தின் மண்டல அலுவலகமான பெங்களூரிலிருந்து அவர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே கூடுதல் பணியாளரை நாங்கள் நியமிக்க முடியும். மிக முக்கியமாக, ஆதார் பதிவை மேற்கொள்வதற்கான ”கிட்” அவர்கள்தான் வழங்கியாக வேண்டும்.

கூடுதலான பணியாட்களையும் கூடவே ”கிட்”-ஐயும் அவர்கள் வழங்கினால் மட்டுமே எங்களால் நிலைமையை சமாளிக்க இயலும். பெரம்பலூர் நகரத்தில் இரண்டு இடங்களில் பதிவுகளை மேற்கொள்கிறோம். இருப்பதை வைத்துக்கொண்டு கூடுமானவரையில் மக்களுக்கு சிரமமின்றி பதிவை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ஆதார் பதிவுக்காக அலைக்கழிக்கப்படும் அவலம் !
ஆதார் பதிவுக்காக அலைக்கழிக்கப்படும் அவலம் !

அடுத்து, தனியார் இடத்தில் சேவை மையத்தை நடத்தக்கூடாது என்ற விதி இருக்கிறது. தாலுகா அலுவலகத்தில் ஏற்கெனவே இ-சேவை மையத்திற்கு இடம் வழங்கியிருக்கிறார்கள். இந்த இடத்தையும்கூட, பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகே பெற முடிந்தது. டோக்கனை பெற்றுக்கொண்டு அருகாமையில் உள்ள தாலுகா அலுவலகத்தில் காத்திருக்கும்படி மக்களுக்கு அறிவுறுத்துகிறோம்.” என்கிறார்.

தாலுகா அளவில் தீரும் பிரச்சினை அல்ல! UIDAI தொடர்புடைய பிரச்சினை. தமிழகத்தில் சேவையை வழங்கும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்தான் உரிய ஏற்பாடுகளை செய்து தரவேண்டும். மாநில தலைமையகத்தையும் தொடர்புகொண்டோம். ஆதார் விவகாரங்களை கையாளுபவர்கள் என அடுத்தடுத்து இரண்டு எண்களை வழங்கினார்களேயொழிய சம்பந்தபட்ட அதிகாரியை இறுதிவரை நம்மால் தொடர்புகொள்ள இயலவில்லை.

ஆதார் பதிவுக்காக அலைக்கழிக்கப்படும் அவலம் !
ஆதார் பதிவுக்காக அலைக்கழிக்கப்படும் அவலம் !

அனைத்துக்கும் ஆதார் கட்டாயம் என்ற நிலையில், பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் எடுத்தவர்கள் எல்லாம் ஆதாரை புதுப்பித்தாக வேண்டும் என்று அறிவிப்பை மட்டும் வெளியிட்டு விட்டு அதற்கேற்றாற்போல சேவை மையங்களை விரிவுபடுத்தாமல் மக்களை அலைக்கழிப்பது நியாயமா? உரிய முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு !

வே.தினகரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.