இவற்றை ஏன் நமக்கு அனுப்புகிறார்கள் ? இவை அத்துமீறல் அல்லவா ? ஏதாவது செய்யுங்கள் ஸ்டாலின் சார் !

அந்தப் புத்தகங்களோடு சேர்த்து அனுப்பப்பட்டுள்ள இந்தியில் எழுதப்பட்டுள்ள கடிதமும் நமக்கு கிடைத்திருக்கிறது அந்தக் கடிதத்தை கூகுலில் போட்டு தமிழ்ப்படுத்தினால் இப்படி வருகிறது.....

1

ஏதாவது செய்யுங்கள் ஸ்டாலின் சார்
**********************
அன்பின் முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்
இது விஷயமாக மூன்றாவது முறையாக நான் உங்களுக்கு எழுதும் கடிதம்
இதற்கு முன்னர் இது குறித்து நான் எழுதிய இரண்டு கடிதங்களும் உங்களை வந்து சேர்ந்திருக்க வாய்ப்பில்லை
சேர்ந்திருந்தால்
இதுகுறித்து நிச்சயமாக நீங்கள் வினையாற்றி இருப்பீர்கள் என்பது உங்கள்மீதான என்னுடைய மலை போன்ற நம்பிக்கை
நான் எழுதுவது உங்களை வந்து சேர்கிறதா?
நீங்கள் இது விஷயத்தில் வினையாற்றி இருக்கிறீர்களா
எதையும் அறிந்து கொள்கிற பின்புலம் எனக்கு இல்லை
ஆனாலும்
போய் சேர்ந்துவிடாதா?
ஏதேனும் நிகழ்ந்து விடாதா?
என்ற எதிர்பார்ப்பில் ஒரு லூசு மாதிரி எழுதிக் கொண்டே இருக்கிறேன்.
எழுதிக் கொண்டே இருப்பேன்
இந்த மாதிரி லூசுகளால் தான் பூமி இயங்குகிறது என்று எண்ணியபடி என்னை நானே சமாதானம் செய்து கொள்கிறேன்
இரண்டு விஷயங்கள்
உத்திரப் பிரதேசத்தில் குரா என்றொரு கிராமம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ளது
அந்தக் கிராமத்தில் 17.09.2023 அன்று தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டுள்ளது.
150 பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
அமர்சிங், மருத்துவர் சுரேஷ், அவதேஷ், மற்றுமசோக் வித்யார்த்தி ஆகியோர் தந்தை பெரியார் குறித்து உரையாற்றி உள்ளார்கள்
குழந்தைகளுக்கு இனிப்பும் பேனா மற்றும் நோட்டுப் புத்தகங்களும் வழங்கப்பட்டிருக்கிறது
அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி உள்ளது
எரிச்சலடைந்த யோகி அரசு
பெரியார் பிறந்த நாளன்று உரையாற்ரிய அந்த நால்வர் மீதும் 295, 153 ஏ, ஆகிய பிரிவுகளின் மேல் வழக்குப் பதிந்துள்ளது என்ற தகவலை 27.09.2023 நாளிட்ட தீக்கதிர் தெரிவிக்கிறது
தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவில் அவர் குறித்து உரையாற்றுவதே தவறென்று
உரையாற்றியவர்கள் மீது வழக்குப் போடுகிறது யோகி அரசு
அதே உத்திரப் பிரதேசத்தில் இருந்து
உங்கள் ஆளுகைக்கு உட்பட்ட நமது பள்ளிகளுக்கு
திரு யோகி ஆதித்தியநாத் அவர்களின் புகைப்படங்களை அட்டைப்படங்களாகக் கொண்ட இரண்டு நூல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன
இப்போது அந்தப் புத்தகங்களோடு சேர்த்து அனுப்பப்பட்டுள்ள இந்தியில் எழுதப்பட்டுள்ள கடிதமும் நமக்கு கிடைத்திருக்கிறது
அந்தக் கடிதத்தை கூகுலில் போட்டு தமிழ்ப்படுத்தினால் இப்படி வருகிறது
யோகி அவர்களின் சிறப்பான நிர்வாகத்தினால் உத்திரப் பிரதேசம் மிகச் சிறப்பாக முன்னேறி வருவதாகவும்
அனைத்து மக்களின் வளர்ச்சிக்காகப் பாடுபடும் யோகியின்மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பதாகவும்
அனைத்து மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் அவருக்கு இருப்பதாகவும்
பெண்கள், விவசாயிகள், மற்றும் இளைஞர்களின் நலனுக்காக அவர் பாடுபடுவதாகவும்
கலாச்சார ஒற்றுமைக்காக அவர் பாடுபடுவதாகவும்
பெண்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் அவர் தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டுள்ளதாகவும்
அவரது சித்தனைத் தெறிப்புகளும் உரைகளுமே அந்த நூல்கள் என்று அந்தக் கடிதத்தின் வழி நம்மால் அறிய முடிகிறது
இவை அனைத்துமே பொய்
பன்முகத் தன்மைக்கும் இவருக்கும் சம்பந்தமே இல்லை
அதற்கு எதிராகக் களமாடுபவர் இவர்
வீரஞ்செறிந்த போராட்டத்தை விவசாயிகள் நடத்திய போது எவ்வளவு வன்மமாக அதை இவர் எதிர்கொண்டார் என்பதையும் நாம் அறிவோம்
பெண்கள் குறித்தான இவரது பார்வை எவ்வளவு கேவலமானது என்பதையும் நாம் அறிவோம் என்பதெல்லாம் ஒன்று
இவற்றை ஏன் நமக்கு அனுப்புகிறார்கள்?
இவை அத்துமீறல் அல்லவா?
என்பது இரண்டு
ஏதாவது செய்யுங்கள் ஸ்டாலின் சார்
மிக்க நன்றி
அன்புடன்,
இரா.எட்வின்
29.09.2023

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

1 Comment
  1. கலைமணி says

    தொடர்ந்து போராடுகிறீர்கள். பள்ளிக் கல்வித்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது?

Leave A Reply

Your email address will not be published.