ஆண்டவனால் தான் காப்பாற்ற முடியும் ! ஆசிரியர்கள் போராட்டம் குறித்து வா.அண்ணாமலை அறிக்கை !

1

ஆண்டவனால்தான் காப்பாற்ற முடியும் ! ஆசிரியர்கள் போராட்டம் குறித்து வா.அண்ணாமலை அறிக்கை !

ஆசிரியர்கள் போராட்டம், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை அதிரடியாக கைது செய்திருப்பது மற்றும் இவ்விவகாரத்தில் அரசின் அணுகுமுறையில் உள்ள குளறுபடி ஆகியவை குறித்து, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் வா.அண்ணாமலை அவர்கள் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2 dhanalakshmi joseph

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

”சென்னையில் பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகத்தில் மூன்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிக் கொண்டிருந்தார்கள். மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் போராடியவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தைக்கு பின்பு அமைச்சர் அவர்களின் அறிவிப்பு போராட்டக் களத்தில் உள்ளவர்களுக்கு திருப்தி இல்லாததால் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தார்கள். இந்நிலையில் போராடிக் கொண்டிருந்த ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளார்கள். குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றி உள்ளார்கள். குழந்தைகள் இதையெல்லாம் பார்த்து கதறி அழுதுள்ளார்கள். காவல்துறையின் இந்த நடவடிக்கை வேதனையினை அளிக்கிறது.

- Advertisement -

- Advertisement -

வா.அண்ணாமலை.
வா.அண்ணாமலை.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எதிர் கட்சித் தலைவராக இருந்த போது இவர்களுடைய போராட்டத்தில் கலந்து கொண்டு ஆற்றிய உரையினை நாங்கள் கேட்டோம். அதிமுக ஆட்சியில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காலமுறை ஊதியம் வழங்குவோம் என்று தான் சொல்கிறார். இவர்கள் என்ன கோரிக்கை வைத்தார்கள் என்று புரிந்துகொண்டு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று சொன்னார்களா என்று நமக்குத் தெரியவில்லை?..

தொடர்ச்சியாக இவர்களுடைய ஆட்சியிலும் போராடிக் கொண்டே இருக்கிறார்கள். மூவர் குழு நியமனம் செய்துள்ளார்கள். 31/5/2009க்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் 01/06/2009 க்கு பின்பு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே பெருத்த ஊதிய வேறுபாடு உள்ளது என்பது உண்மையிலும் உண்மையாகும்.

ஆசிரியர்கள் கைது..
ஆசிரியர்கள் கைது..

01.01.2006 முதல் மத்திய அரசுக்கு இணையான ஊதிய நிர்ணயம் மட்டுமே இடைநிலை ஆசிரியர்களுக்கான தீர்வாக அமைய முடியும். போராடிவரும் சிறப்பாசிரியர்களுக்கு மாதம் ₹ 2,500/- ஊறியத்தினை உயர்த்தி அறிவித்ததுடன், அவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் மருத்துவ காப்பீடு திட்டத்தையும் அறிவித்துள்ளார்கள். நாங்கள் ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் செய்யவில்லை. எங்கள் அனைவரையும் பணி நிரந்தரப்படுத்துங்கள் என்றுதான் போராடி வருகிறோம். 12 அரை நாள் ஆசிரியர் என்ற பெயரிலிருந்து விடுவித்து முழுநேர ஆசிரியர்களாக்க வேண்டும் என்றுதான் கேட்கிறோம். தற்போது அரசின் அறிவிப்பினை ஏற்று போராட்டத்தினை வாபஸ் பெற்றுள்ளார்கள்.

4 bismi svs

ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் பணிக்கு நியமனம் செய்ய வேண்டி தொடர்ந்து போராடி வருகிறார்கள். நியமனத் தேர்வை ரத்து செய்து விட்டு TET தேர்ச்சி பெற்றவர்களை காலிப்பணியிடங்களில் நியமனம் செய்ய வேண்டும் என்று போராடி வருகிறார்கள். அவர்களுக்கு நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. வயதுவரம்பினை வேண்டுமானால் தளர்வு செய்கிறோம் என்று பொது பிரிவினருக்கு 52 வயது என்றும், மற்றவர்களுக்கு 58 வயது என்றும் அறிவித்துள்ளார்கள். TET தேர்வில் தேர்ச்சி பெற்றே 10, 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. வயது தளர்வினால் எங்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்கள். இந்த அறிவிப்பு எல்லாம் வெற்று அறிவிப்புகள் என்று கூறி போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்கள். அவர்களின் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு எந்த அறிவிப்பும் இல்லை. அவர்களின் கோரிக்கைளில் நியாயமிருக்கிறது.

ஆசிரியர்கள் கைதை கண்டித்து திண்டிவனத்தில் ஆர்ப்பாட்டம் |
ஆசிரியர்கள் கைதை கண்டித்து திண்டிவனத்தில் ஆர்ப்பாட்டம் |

எல்லாவற்றுக்கும் மேலாக கல்வி அமைச்சர் அவர்களின் அறிவிப்பில் போராடிவரும் ஆசிரியர்களின் இதய குமுறக்கு தீர்வு காண முடியவில்லை. ஆனால் தமிழ்நாடு அரசின் மிக முக்கியமான திட்டமான எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சியில் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு கலந்து கொள்ள வேண்டும் என்றுதான் அறிவுரை வழங்குகிறார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை ஆசிரியர்களின் இதயக் குமுறல்களுக்கு கொடுப்பதாக தெரியவில்லை.

போராடும் ஆசிரியர்களுடைய கோரிக்கைகளுக்கும் உணர்வுகளுக்கும் தீர்வு காண முன்வராமல் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் பெருமைகளையே சொல்லி வருகிறார் என்றால்.. பள்ளிக் கல்வித்துறை எங்கே சென்று கொண்டுள்ளது?..என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம்..
தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையின் இந்த செயல்பாட்டினை ஆண்டவனால்தான் காப்பாற்ற முடியும்!.

ஆம்… ஆண்டவன் என்றால் இதற்கு முன்பு ஆட்சி செய்த தலைவர் கலைஞர் அவர்களுடைய கொள்கை நெறிவழியில் சென்றால் மட்டும்தான் காப்பாற்ற முடியும்!.

ஆசிரியர் போராட்டம்
ஆசிரியர் போராட்டம்

சில IAS அதிகாரிகளுடைய பிடியிலிருந்து இந்த ஆட்சி முதலில் விடுபட வேண்டும். மகளிர் உரிமைத்தொகை, மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம் போன்ற நலத்திட்டங்கள் எல்லாம் வாக்கு வங்கியாக மாற்றமடைந்து வருமா என்பதை காலம் வருகிறபோது தான் தெரிந்து கொள்ள முடியும். நிரந்தரமாக உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் வாக்கு வங்கியினை பற்றி கவலைப்படாமல் இருந்தால்… இன்றைய ஆட்சியாளர்களுக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..

நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பழைய ஓய்வூதிய திட்டம் பற்றிய அறிவிப்பு ஏதேனும் வெளிவருமா?.. விடியல் ஏற்படுமா?.” என பல்வேறு கேள்விகளை அடுக்கியிருக்கிறார், வா.அண்ணாமலை.

வே.தினகரன்.

5 national kavi
1 Comment
  1. Muthuselvan says

    என்று இந்த ஆட்சி தொலையுமோ அன்றுதான் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் விடியல்.

Leave A Reply

Your email address will not be published.