அரசு மதுபான கடையை முற்றுகையிட்டு பெண்கள் சமையல்!
குளித்தலை அருகே பஞ்சப்பட்டி பகுதியில் உள்ள அரசு மதுபான கடையை திறக்க விடாமல் அப்பகுதி மக்கள் 12 மணி முதல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை சமரசம் ஏற்படாததால் கடை முன்பு சமைத்து சாப்பிட தயாராகி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பஞ்சப்பட்டி பேருந்து நிலையம் மற்றும் அதிக அளவு பட்டியல் என மக்கள் குடியிருப்பு பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக அரசு மதுபான கடை எண் 5040, இயங்கி வருகிறது,, இதனால் அவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலகத்திற்கு செல்வோர்கள், பொதுமககள் பல்வேறு நிலைகளில் பாதிக்கப்படுவதாக கூறி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இதனை ஏற்ற அரசு நேற்று கடையை மாற்றுவதற்காக வேறு இடத்திற்கு மது பானங்களை எடுத்து சென்றுள்ளனர், அங்கும் மதுபான கடை வைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் இன்று கடையை திறக்க 12 மணிக்கு வரும்பொழுது அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு மதுபான கடையை மீண்டும் இப்பகுதியில் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து மதுபான கடையை திறக்க விடாமல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது, காவல்துறையினர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர், அவர்கள் தடையை அகற்றுவதற்கு சம்மதம் தெரிவிக்காததால் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அதிக அளவில் பெண்கள் கடை முன்பு சமைத்து சாப்பிடுவதற்கு சிலிண்டர் மற்றும் பாத்திரங்களை வைத்து தயாராகி சமைத்துக் கொண்டு வருகின்றனர், தொடர்ந்து அரசு மதுபான கடை மூடப்பட்டுள்ளது இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-நௌஷாத்