செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் கோலோச்சும் பெண் ஆளுமைகள் !
தமிழ்நாட்டில் தமிழ்நாடு கேடரில், கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் உள்ள 26 ஐஏஎஸ் அதிகாரிகளில், தற்போது ஐந்து பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பணியாற்றி வருகின்றனர்.
பி அமுதா 1994-IAS batch; ககர்லா உஷா 1994-IAS batch; சுப்ரியா சாஹி 1991-IAS batc; சந்தியா வேணுகோபால் சர்மா 1995-IAS batch; ஆர் ஜெயா 1995-IAS batch. 6 பேர் ஒன்றிய அரசு பணிகளில் பணியாற்றி வருகின்றனர்.
எஸ் கிருஷ்ணன் (1989-batch); எஸ். கோபாலகிருஷ்ணன் (1991-batch); டாக்டர் ராஜேந்திரகுமார் (1992-batch); நீரஜ் மிட்டல் (1992-batch); ராஜேஷ் லக்கானி (1992-batch); சுதீப் ஜெயின் .
தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட 11 பேர் :
1) எஸ் கிருஷ்ணன் (1989-batch) புதுக்கோட்டை மாவட்டம். ஒன்றிய அரசு பணியில் இருந்து வருகிறார்.
2) எம் கே பிரபாகர் (1989-batch) விருதுநகர் மாவட்டம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் தலைவராக ஆகஸ்ட் 2024 முதல்- தற்போது வரை இருந்து வருகிறார்.
3) எஸ் கோபாலகிருஷ்ணன் (1991-batch) ஒன்றிய அரசு பணியில் இருந்து வருகிறார்.
4) என் முருகானந்தம் (1991-batch) தமிழ்நாடு வருவாய் பேரிடர் மேலாண்மை ஆணையரின் கூடுதல் தலைமை செயலாளர்.
5) டாக்டர் J. ராதாகிருஷ்ணன், (1992-batch) சென்னை. அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி தலைவர்.
6) டாக்டர் எஸ் விஜயகுமார் (1993-batch), தொழில் முதலீட்டு & வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்.
7) டாக்டர் கே மணிவாசகம், (1993-batch) கோவை மாவட்டம். தமிழ்நாடு அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், & மதுவிலக்கு ஆயத்தீர்வை கூடுதல் தலைமைச் செயலாளர் .
8) பி அமுதா (1994-batch). மதுரை மாவட்டம். முதல்வரின் முகவரி துறை & கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமை செயலாளர்.
9) எம் ஏ சித்திக் (1995-batch). நெல்லை மாவட்டம். நிதி துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர்.
10) த. உதயசந்திரன் (1995-batch). தொழில் முதலீட்டுக் கழக மேலாண்மை இயக்குனர் .
11) பி செந்தில் குமார் (1995-batch). முதல்வரின் முதன்மை செயலாளர் -1
– அங்குசம் செய்திப்பிரிவு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.