அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் மகளிர் தின விழா

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத்துறை  சேவை செய்யும் கிராமங்கள் மற்றும் நகர குடிசைவாழ் பகுதி பெண்களுக்கு மகளிர் தின விழா கல்லூரியின் சமுதாய மன்றத்தில் நடைப்பெற்றது. கல்லூரியின் அதிபர் செயலர் முதல்வர் ஆகியோரின் ஆலோசனைப்படி செப்பர்டு விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சே. ச அவர்கள் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் கிராமத்து பெண்கள் அனைவரும் தற்சார்பு வாழ்க்கை வாழ சுயதொழில் செய்தால் முன்னேற முடியும் என்று கூறினார்.

Women's Day Celebrationகல்லூரியின்  வேலை வாய்ப்பு பயிற்சி மற்றும் நிறுவனத் தொடர்புகளின் இயக்குநர் முனைவர் மகேந்திரன் சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டார். அவர் தனது உரையில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்பிற்கு திறமையும் தன்னம்பிக்கையும் இருந்தால் வாழ்கையில் முன்னேற முடியும் என்று பேசினார்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

மண்ணச்சநல்லூர் பகுதியிலுள்ள எதுமலை கிராமத்தில் செயல்படும் எம்பவர் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் அறங்காவலர் முனைவர் கனிமொழி சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் சிறகை விரி சிகரம் தொடு என்ற தலைப்பில் பேசும் போது, உயரங்களைத் தொட, இறக்கைகளை விரி, கனவுகளை நனவாக்கு, வாழ்க்கையில் முன்னேறு, சாதனைகளைப் படை என்று பேசி கிராமத்து பெண்களை உற்சாகப்படுத்தினார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

Women's Day Celebrationமுன்னதாக விரிவாக்கத்துறையின் இளநிலை ஒருங்கிணைப்பாளர் திருமதி யசோதை   வரவேற்றார். முடிவில்  இளநிலை ஒருங்கிணைப்பாளர் திரு சுதாகர் நன்றி கூறினார். தமிழாய்வுத்துறையின் முதுகலை முதலாம் ஆண்டு மாணவி செல்வி அரசி மார்லின் மற்றும் ஆங்கிலத்துறையின் இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவன் செல்வன் கிஷோர் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

முதல்வர் பிறந்தநாள்

Women's Day Celebrationஇவ்விழாவில் செப்பர்டு விரிவாக்கத்துறை தனது சேவை செய்யும் திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் நகர குடிசைவாழ் பகுதிகளிலிருந்து நூற்றி இருபத்தெட்டு மகளிர் கல்லூரி மாணாக்கர்கள் மற்றும்  செப்பர்டு  ஒருங்கிணைப்பர்கள் திரு ஜெயசந்திரன் திரு லெனின் திரு ஜெயசீலன் இளநிலை உதவியாளர் அமலேஸ்வரன் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

Women's Day Celebrationஇவ்விழாவில் மகளிருக்கான விளையாட்டு  போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகள் வழங்கினார். மகளிர் தினவிழா நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இளநிலை ஒருங்கிணைப்பாளர் திருமதி யசோதை செய்திருந்தார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.