செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறை சார்பாக பெண்கள் திறன் மேம்பாட்டு நிகழ்வு !
“இந்த வளாகத்தில் ஆண் பெண் என இருவரும் சமத்துவமாகப் பயணிக்கிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்கிறேன்”
செயின்ட் ஜோசப் கல்லூரி தமிழ் ஆய்வு துறை நிகழ்வில் வழக்கறிஞர் பானுமதி பெருமிதம் !
செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறை சார்பாக பெண்கள் திறன் மேம்பாட்டு நிகழ்வு நடைபெற்றது. தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஆ.இராசாத்தி வரவேற்புரை வழங்கினார்.
கல்லூரி அகத்தர உறுதிப்பிரிவு கூடுதல் இயக்குநர் முனைவர் ரா.குர்ஷித் பேகம் தலைமையுரையாற்றினார். அவர் தம் தலைமையுரையில், பொதுவெளியில் சமத்துவத்தை எழுதுவதில் இருந்துதான் சமூக மாற்றம் தொடங்குகிறது. மூளை, அறிவு எல்லாம் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமம்தான். எனவே அதைக் கொண்டு எந்த இன வேறுபாடுமின்றி விடுதலையைச் சமைப்போம் என்கிற கருத்தை முன்மொழிந்தார்.
தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி வாழ்த்துரை வழங்கினார். அவர் வாழ்த்துரையில், தமிழாய்வுத்துறை எண்ணற்ற நிகழ்வுகளை நடத்தி வருகிறது. அதே வேளையில் பென்களை மையமிட்டு நடக்கும் இந்த நிகழ்வை தமிழாய்வுத்துறை ஒருங்கிணைக்கிறது என்கிறபோது கூடுதல் மகிழ்வு ஏற்படுகிறது.
ஒவ்வொரு நாளும் சமூகப் போராட்டத்தில் களம் காணக்கூடிய சமூகப்போராளி வழக்குரைஞர் த.பானுமதி அவர்களைக் கருத்துரையாற்ற அழைத்து வந்திருப்பது பாராட்டுக்குரியது. இந்த அமர்வு பொதுவெளியில் ஆண் பெண்ணும் இணைந்து பயணிக்க புதிய பலத்தை எமது மாணவர்களிடையே விதைக்கும் என நம்புகிறேன் எனப் பதிவு கொண்டார்.
“பொதுவெளியில் பெண்கள் சந்திக்கும் சவால்கள்” என்கிற பொருண்மையில் வழக்குரைஞர் த. பானுமதி கருத்துரை வழங்கினார். இந்த வளாகத்தில் ஆண் பெண் என இருவரும் சமத்துவமாகப் பயணிக்கிறீர்கள் என்பதை உங்கள் பேராசிரியர்களின் உரைகளில் இருந்தும், மாணவர்களின் பகிர்வுகளில் இருந்தும் தெரிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி ஆக இருக்கிறது.

இரவும் பகலும் சமமாய் இருக்க பெண்களுக்கு மட்டும் இரவு எப்போதும் இருட்டாகவே இருக்கிறது. ஆணின் பார்வையில் பெண்ணியம், பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள், வன்புணர்வுகளுக்கானத் தண்டனைகள், ஒரு தலைபட்சமாய் வழங்கப்படும் (அ)நீதி உள்ளிட்ட பல கருத்துக்களை முன்மொழிந்தார்.
மேலும் பெண்ணின் சுயமரியாதை என்பது அவள் அழகாய் இருக்கிறாள் என்பதை பிறருக்குச் சொல்ல வாய்ப்பு வழங்கியதா? என் வினா எழுப்பி பெண்களுக்கான சுதந்திரக் கருத்துக்களை அனுபவங்களோடு எடுத்துரைத்தார். தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நிறைவில் தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சி.ஷகிலா பானு நன்றியுரை ஆற்றனர். மூன்றாமாண்டு இளங்கலைத் தமிழ் இலக்கிய மாணவி செ.ஜா. அரசி மார்லின் நிகழ்ச்சிகளை நெறியாளர்கள் செய்தார். இளங்கலைத் தமிழ் இலக்கிய மாணவர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், தமிழாய்வுத் துறைப் பேராசிரியர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று பயனடைந்தனர்.
— ச.ஆசிக் டோனி.