பி எம் ஸ்ரீ பள்ளிகளை தமிழ் நாட்டுக்குள் அனுமதிப்பது அபத்தமானது !

தமிழ்நாட்டின் கல்விச்சூழல் தனித்துவமானது. தனித்துவமான கல்வித் திட்டங்களால் மட்டுமே இதை மேம்படுத்த வேண்டும். நிதியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஒன்றிய அரசின் திட்டங்களால் தமிழ்நாட்டின் கல்விச் சூழலை சிதைப்பது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

முழக்கம் ஒன்று ! செயல் வேறொன்று !
ஐயம் கொள்ள வைக்கிறது தமிழ்நாடு அரசின் முடிவு!

மிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு கல்வித் திட்டங்கள் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையின் மாதிரியே பின்பற்றி உள்ளது என்பதை பல்வேறு கல்வியாளர்கள் தொடர்ந்து கூறி வந்தனர்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

தமிழ்நாடு அரசு ஒன்றிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு அதற்கு செயல் வடிவம் கொடுப்பதில் மும்முரமாக உள்ளது என்பதை கல்வியாளர்கள் வருத்தத்தோடு பல தளங்களில் பகிர்ந்து வந்தனர்.

தமிழ்நாடு அரசு சார்பில், கல்விக் கொள்கையை வகுப்பதற்கான குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றிய அரசின் பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கி இருப்பது தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டு விட்டதா? என்ற ஐயத்தை வலுப்படுத்தி இருக்கிறது.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை தலை விரித்து ஆடுகிறது‌‌.நீதிமன்றத்தில் உள்ள வழக்கை காரணம் காட்டி தலைமையாசிரியர் இல்லாமல் பல பள்ளிகள் இயங்கி வருகிறது.ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்கிட தற்காலிக ஆசிரியர்களே நியமிக்கப்படுகிறார்கள்.அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆர்வமிக்க ஆசிரியர்களாலும், பெற்றோர்களாலும் பள்ளி கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மிக மோசமாக உள்ளது. கழிப்பிட வசதி இல்லாமல் பல பள்ளிகள் அல்லாடுகிறது.

இந்த குறைகளை எல்லாம் சரி செய்து செயல்பட வேண்டிய தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசின் மாதிரி பள்ளி திட்டத்தை ஏற்றுக்கொண்டு செயல்படுவது மாநில அரசால் நடத்தப்படும் பள்ளிகளின் தரத்தை இன்னும் குறைத்து விடும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஒன்றிய அரசின் கல்விக்கான நிதி ஒதுக்கீடு என்பது திட்டங்களின் அடிப்படையில் ஒதுக்கப்படுவதால் மாநில அரசால் நிர்வகிக்கப்படும் கல்வித் திட்டங்களை மேம்படுத்த ஒன்றிய அரசு நிதியை பயன்படுத்த முடியாமல் மாநில அரசுகள் ஒன்றிய அரசின் திட்டங்களை அப்படியே அமல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுவதாக பல தரப்பில் இருந்தும் கூறப்படுகிறது.அனைவருக்கும் கல்வித் திட்டம், ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் போன்றவைகள் ஒன்றிய அரசின் திட்டங்களாக அப்படியே இங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசுக்கான வட்டார கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம் போன்ற கண்காணிப்பு முகமைகள் இருந்தாலும் அவற்றில் இருந்து விடுபட்டு மேற்கண்ட கல்வி திட்டங்கள் வட்டார அளவில் தனியாக நடைமுறைப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது ‌.

ஆசிரியர்கள் வட்டார வள மையத்திற்கும் வட்டார கல்வி அலுவலகத்திற்கும் அறிக்கை ஒப்படைவு செய்யும் பொறுப்புள்ளவர்களாக மாற்றப்பட்டு தொடர்ந்து புள்ளிவிவர கோப்புப் பணிக்காகவே பெரும் நேரத்தை செலவிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் கல்விச்சூழல் தனித்துவமானது. தனித்துவமான கல்வித் திட்டங்களால் மட்டுமே இதை மேம்படுத்த வேண்டும். நிதியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஒன்றிய அரசின் திட்டங்களால் தமிழ்நாட்டின் கல்விச் சூழலை சிதைப்பது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இதற்கெல்லாம் ஒரே தீர்வு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு பொதுவான பட்டியலில் உள்ள கல்வித்துறையை மாநில பட்டியலுக்குள் கொண்டு வருவதுதான். அதற்கான வலுவான திட்டத்தை முன் வைப்பது தான் தமிழ்நாடு அரசின் முற்போக்கான செயல்பாடாக இருக்கும்.

வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தேர்தலை எதிர்கொள்ளும் கட்சிகள் கல்வித்துறையை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றுவதற்கான கொள்கையை தேர்தல் அறிக்கையில் சேர்த்திட ஒன்றிய கட்சிகளிடம் வலியுறுத்த வேண்டும்.

ஒரு பக்கம் ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு, கல்வியை மாநில பட்டியலுக்கு கொடுக்க வேண்டும் என்று முழக்கம் செய்து கொண்டு மற்றொரு பக்கம் கல்வி திட்டத்தின் நிதியை பெறுவதற்காக ஒன்றிய அரசு கல்விக் கொள்கையை உள்ளடக்கிய பி எம் ஸ்ரீ பள்ளிகளை தமிழ் நாட்டுக்குள் அனுமதிப்பது அபத்தமானது.

முகநூலில் : ஆசிரியர், மெய்ச்சுடர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.