ஒர்க் ப்ரம் ஹோம் … டேட்டா என்ட்ரி ஜாப் மோசடி ! பான்பராக் வாயன்கள் … பராக் பராக் !!

அவனுக்கு தமிழும் புரியாது, இங்கிலீசும் தெரியாது. அவன் பேசுற இந்தி நமக்கும் வெளங்காது. ஆனாலும், அவன் கில்லாடிதான், எப்படியோ பேசி கவுத்திடறானே?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஒர்க் ப்ரம் ஹோம் … டேட்டா என்ட்ரி ஜாப் மோசடி ! பான்பராக் வாயன்கள் … பராக் பராக் !!

”ஓடுனியே ஒரு பையன தொறத்திகிட்டு… அவன் நேரா ஒரு வேனுக்குள்ள போயிருப்பானே… போனான் … நீயும் போனியா? அங்கே நாலஞ்சி பேரு அமுக்கிப் பிடிச்சி உன் கிட்னியை எடுத்திருப்பாய்ங்களே…?” வடிவேலுவின் இந்தக் காமெடிக் காட்சிக்கு சற்றும் சளைத்ததில்லை, வடநாட்டு கும்பல்கள் ஆன்லைனில் அரங்கேற்றும் மோசடிக் காட்சிகள்!

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

பான் பராக் குரலில் “நா ஸ்டேட் பாங்க் மானேஜர் பேசுது.. ஏ.டி.எம். கார்டு ஓ.டி.பி. சொல்லு” னு ஆரம்பிச்சு… ”இப்போ, வீட்டிலிருந்தபடியே வேலை வேண்டுமா?” என்று விதம் விதமாக விரிகிறது, ஆன்லைன் மோசடிக்கூத்துகள்!

”ஒர்க் ப்ரம் ஹோம்னு ஜாயின் பன்னேன். இப்போ, சொன்ன டைம்ல வேலையை முடிக்கலைனா… போட்ட அக்ரிமென்ட்ட மீறிட்டனு கோர்ட்ல கேஸ் போட்ருவேன். இல்லாட்டி ஏழாயிரம் ரூபாய பதினோரு மாசம் எடுத்து வையினு” மிரட்டுறாங்க…னு அழாத குறையாக அலற்றிப் புலம்பினார், அந்தப் பெண்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

குடும்பச் சூழல் காரணமாக, உடனடியாக வேலைக்கு சென்றாக வேண்டிய கட்டாயம் அந்த பெண்ணுக்கு. சுயவிவரம் கொடுத்து விசாரித்த இடங்களிலெல்லாம் பார்த்து சொல்கிறோம் என்ற பதிலே கிடைத்திருக்கிறது. வேலைவாய்ப்புக்கென்றே பிரத்யேகமான ஆன்லைன் ஆப்கள் சிலவற்றிலும் தனது சுயவிவரக் கோப்புகளை பதிவேற்றம் செய்திருக்கிறார், அப்பெண். அந்த சமயத்தில்தான், அவருக்கு வந்திருக்கிறது, பான்பராக் நெடி வீசிய அந்த தொலைபேசி அழைப்பு.

”டேட்டா என்ட்ரி ஜாப்-னு சொன்னாங்க. டெய்லி எவ்ளோ பார்ம் பில் பன்றீங்களோ., அவ்ளோ சேலரினு சொன்னாங்க. வாட்சப் நம்பர் வாங்கி, அதுலதான் எங்கிட்டயிருந்து எல்லா டீட்டெய்ல்சும் கலெக்ட் பன்னாங்க. அம்மா பேரு, அப்பா பேரு, ஆதார் கார்டு, மாதிரி கையெழுத்துன்னு எல்லாத்தையும் வாங்குனாங்க. இப்ப ஒரு லிங்க் அனுப்புவோம். அதுல சொல்ற மாதிரி செய்ங்க சொன்னாங்க. எல்லாம் முடிஞ்ச பிறகு, பில் பண்ண வேண்டிய பார்ம் அனுப்புனாங்க. நான் அப்பவே சொன்னேன். என்கிட்ட லேப்டாப் இல்லை. மொபைல்தான் இருக்கு. செட் ஆகுமானு கேட்டேன். டோன்ட் ஒர்ரின்னாங்க.

சத்தியமா சொல்றேன். அவங்க அனுப்புன பார்ம என்னால ஒரு நாளைக்கு பத்து பதினைஞ்சுக்கு மேல பில் பன்ன முடியல. அதுக்குள்ள கண்ணு பூத்து போச்சு. கை மறத்து போச்சு. ஸ்மால், கேபிடல், ஸ்பெஷல் கேரக்டர்னு கலந்து இருந்துச்சு.

நான் முதல் நாள் அன்னிக்கே மெசேஜ் போட்டேன். என்னால முடியாது. இந்த ஜாப் செட் ஆகாதுனு. ரெண்டுநாள் செய்ங்க அப்புறம் சொல்லுங்கனு சொன்னாங்க. சரி ட்ரை பன்னுவோம்னு நானும் முடிஞ்ச வரை பன்னேன். முடியல. இதுக்கு மேல முடியாதுடா சாமினு சொல்லும்போதுதான் அவங்க டோனே மாறுச்சு.

நாலு நாள் டைம் கொடுத்து முன்னூறு பார்ம் பில் பன்னியே ஆகனும்னு மெரட்டுனாங்க. இல்லைன்னா, பெனால்ட்டி கட்டணும்னு சொன்னாங்க. இல்லைனா, பதினோரு மாசத்துக்கு மாசா மாசம் 7500 ரூபா கட்ட வேண்டி வரும்னு வேற சொன்னாங்க. எனக்கு மயக்கம் வராத குறையா போச்சு. அழுகைய வேற அடக்க முடியல. முதல்லேயே சொல்லாம இப்ப சொல்றீங்க? டார்கெட் லா இல்லைனுல சொன்னீங்க. இப்போ எப்படி டார்கெட் பிக்ஸ் பன்றீங்கனு கேட்டதுக்கு, அக்ரீமென்ட் பாக்கலியா நீங்கனு அசால்ட்டா கேக்குறான்..

எனக்கு கொஞ்சம் தூக்கி வாரிப் போட்டுருச்சு. அக்ரீமெண்ட்-ஆ? நான்தான் ஆரம்பத்திலேயே, டார்கெட், அக்ரிமென்ட் லா இருந்தா ஜாப் வேணாம் சொன்னேனேனு கேட்டேன்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பதிலா, அக்ரீமெண்ட்ட அனுப்பி வச்சான். என்கிட்ட, ஆதார செக் பன்றதுக்குனு சொல்லி வாங்குன மாதிரி கையெழுத்த பயபுள்ள வெத்து பாண்ட் பேப்பர்ல இன்சர்ட் பன்னி அக்ரிமென்ட் ஆக்கிட்டான்.” என மூச்சிறைக்க சொல்லி முடித்தார், அந்தப் பெண்.

நாம் நமது பாணியில் அக்கும்பலை அணுகியதையடுத்து,  நம்பரை பிளாக் செய்துவிட்டு அடுத்த ”போணி” பார்க்க கிளம்பிவிட்டான், பான்பராக் வாயன். ”தப்பிச்சோம்டா சாமி”னு பெரிய கும்பிடாக போட்டுவிட்டு, அடுத்த வேலை தேட ஆயத்தமாகிவிட்டார், அந்தப் பெண்.

குறிப்பாக, இந்த ஆன்லைன் மோசடிக் கும்பல்கள் எல்லாம் குஜராத், சூரத் பக்கத்திலிருந்துதான் கைவரிசையைக் காட்டி வருகிறார்கள். இதற்கு அவர்கள் வழங்கும் பாங்க் அக்கவுண்ட் விவரங்களே சாட்சி. (பறிக்கிறதுக்கு, நம்மகிட்ட எம்.பி. பதவி இல்லாட்டியும் ராகுல் காந்திக்கு வந்த சோதனை நமக்கும் வந்துற கூடாதுல..)

பான்பராக் எச்சிலை உமிழ்ந்தவாறே, வீட்டிலிருந்தபடியே செய்யும் வேலை போல ஒரு குடிசைத் தொழிலாகவே செய்துவருவார்கள் போல. அவனுக்கு தமிழும் புரியாது, இங்கிலீசும் தெரியாது. அவன் பேசுற இந்தி நமக்கும் வெளங்காது. ஆனாலும், அவன் கில்லாடிதான், எப்படியோ பேசி கவுத்திடறானே?

♦ ♦ ♦

ஒர்க் ப்ரம் ஹோம் … உசார் !

வேலைவாய்ப்புக்கென்று பிரத்யேகமாக இயங்கும் ஆப்களில் பதிவேற்றம் செய்யும் சுயவிவரங்களைக் கொண்டோ, அல்லது பிரபலமான வேலைவாய்ப்பு ஆப்களில் இவர்களே போலியான கம்பெனி பெயரில்  விளம்பரம் கொடுத்தோ உங்களது தொடர்பு எண்ணை கைப்பற்றுகிறார்கள். அடுத்து அழைப்பு. ஆதார் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்கிறார்கள். கூடவே, ஆதார் வெரிபிகேஷனுக்காகனு சொல்லி மாதிரி கையெழுத்தைக் கேட்கிறார்கள். ”அக்ரிமென்ட்லாம் இல்லைதானே? டார்கெட் இல்லைல? னு” நீங்கள் எத்தனை முறை, எத்தனை மொழிகளில் கேட்டாலும் ஆரம்பத்தில் அதெல்லாம் இல்லை என்றுதான் அடித்துக்கூறுவார்கள்.

உங்களால், அந்த டார்கெட்டை எட்டவே முடியாது என்று தெரிந்துதான் டார்கெட் நிர்ணயிப்பார்கள். ”என்னால் முடியாது” என்று எப்போது சொல்வீர்கள் என்றுதான் எதிர்பார்த்திருப்பார்கள். அப்போதுதான், பெனால்டி என்பார்கள். அக்ரிமென்ட் என்பார்கள். அப்படியும் சில நாட்கள் ஆறப்போடுவார்கள். இப்போது, அடுத்த டீம் பேச ஆரம்பிக்கும். “நாங்கள் லீகல் டீம் ல இருந்து பேசுறோம். நீங்க அக்ரீமெண்ட் மீறிட்டீங்க. இன்னும் ரெண்டு மணிநேரத்துல ஏழாயிரம் கட்டலைன்னா.. சைபர் கிரைம்ல (குஜராத் பக்கம்லா சைபர் கிரைம்தான் பேமஸ் போல!) கம்ப்ளையிண்ட் பன்னிடுவோம்.போலீசு வரும்.” என்பார்கள். அடுத்தடுத்து வாட்சப் மெசேஜ் வந்து குவியும். தொலைபேசி தொந்தரவுகள் தொடரும்.

சனியன் விட்டா போதும்னு, அவன் கொடுக்குற அக்கவுண்ட்க்கு பணத்தை போட்டுட்டு அடுத்தவங்ககிட்ட புலம்பும்போதுதான் புரியும் பிராடு கும்பல்கிட்ட ஏமாந்துட்டோம்னு.

இம்மோசடிகள் குறித்து, சைபர் கிரைம் போலீசாரிடம் பேசினோம். “இதுபோன்ற புகார்கள் பெரும்பாலும், பணத்தை கட்டி ஏமாந்த பிறகே எங்களது கவனத்திற்கு வருகிறது. ஆரம்பத்திலேயே, கண்டறிந்துவிட்டால் உடனடியாக https://cybercrime.gov.in என்ற இணையத்தில் கையில் இருக்கும் ஆதாரங்களை வைத்து ஆன்லைனில் புகார் தெரிவிக்கலாம். அல்லது, அந்தந்த மாவட்ட அளவிலேயே (எஸ்.பி. அலுவலகம்) இயங்கும் சைபர்கிரைம் காவல் நிலையங்களில் நேரில் புகாராக தெரிவிக்கலாம். ஒருவேளை, பணத்தை கட்டி ஏமாந்திருந்தாலும் புகாரை எப்படி தருவது எங்கு தருவது என்று தெரியாமல் தடுமாறத் தேவையில்லை. 1930 என்ற சைபர் கிரைம்-இன் இலவச சேவை எண்ணை அழைத்தால், அவர்களே கம்ப்ளைண்ட் பதிவு செய்து கொடுத்துவிடுவார்கள்; மேலும், போதுமான வழிகாட்டுதல்களையும் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.” என்கிறார்கள்.

 – இளங்கதிர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.