அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நீரின்றி அமையாது உலகு ! வாழ்க்கை வாழ்வதற்கே – பாகம் 07

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

நீரின்றி அமையாது உலகு. ஆம், நீர் இல்லை என்றால் இவ்வுலகத்தில் யாவரும் வாழ முடியாது என்பது அறிந்த உண்மை. இஸ்லாமியர்கள் 30 நாட்கள் விரதம் இருப்பார்கள். கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் விரதம் இருப்பார்கள். இந்துக்கள் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி மற்றும் பல நாட்கள் விரதம் இருப்பார்கள். சாப்பாடு கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால், நீர் இல்லாமல் இருக்க முடியாது. குறைந்தபட்சம் நீர் இல்லாமல் மூன்று நாட்கள் கூட வாழ்ந்து விடலாம். 72 மணி நேரம். எனவேதான், மருத்துவர்களும் மூன்று நாளைக்கு ஏதும் எங்களால் சொல்ல இயலாது என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட நீர் நம்முடைய உடலில் மிகவும் முக்கியமாக இருக்கிறது. நம்முடைய முகத்தில் சந்தோஷத்தையும் துக்கத்தையும் வெளியே கொண்டு வருவது நீர். நம்முடைய உடலில் 70 சதவீதம் நீர் இருக்குமானால், நாம் மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கிறோம் என்று அர்த்தம். 70 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கிறோம் என்று சொன்னால், நம்முடைய உடலில் நீர் பற்றாக்குறை என்று அர்த்தம். எனவே, நீர் என்பது மிகவும் மிக மிக அத்தியாசியமான அவசியமான ஒன்று.

நீரின்றி அமையாது உலகு ! மூன்று நாட்கள் என்பது உமிழ்நீர் வைத்துக் கூட நாம் வாழ முடியும். அதுவும் செரிமானத்திற்கும் இந்த உமிழ் நீர் தான் மிகவும் அவசியமானது, அத்தியாவசியமானது. எனவே, இந்த உலகத்தில் வாழும் மனிதன் எத்தனை கிலோ எடை அவருடைய சரீரம் இருக்கிறதோ அத்தனை எடைக்கு எவ்வளவு நீர் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது அத்தியாவசியமான ஒன்று.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

ஒரு நாளைக்கு தண்ணீர் குடிக்க வேண்டிய அளவு

45 கிலோ உள்ளவர்கள் 1.9 லிட்டர்

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

50 கிலோ உள்ளவர்கள் 2.1 லிட்டர்

55 கிலோ உள்ளவர்கள் 2.3 லிட்டர்

60 கிலோ உள்ளவர்கள் 2.5 லிட்டர்

65 கிலோ உள்ளவர்கள் 2.7 லிட்டர்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

70 கிலோ உள்ளவர்கள் 2.9 லிட்டர்

75 கிலோ உள்ளவர்கள் 3.2 லிட்டர்

80 கிலோ உள்ளவர்கள் 3.5 லிட்டர்

85 கிலோ உள்ளவர்கள் 3.7 லிட்டர்

90 கிலோ உள்ளவர்கள் 3.9 லிட்டர்

95 கிலோ உள்ளவர்கள் 4.1 லிட்டர்

100 கிலோ உள்ளவர்கள் 4.3 லிட்டர்

நீரின்றி அமையாது உலகு ! சராசரி மூன்று முதல் ஐந்து லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்வோம் என்று சொன்னால் வரும் காலங்களில் வெப்பம் சம்பந்தமான நீர் சம்பந்தமான எந்த தொற்று நோய் வருவதற்கு வாய்ப்பில்லை. எனவே, நீரை எடுத்துக் கொள்வோம். வெந்நீராய் எடுத்துக் கொள்வோம். நன்னீராய் எடுத்துக் கொள்வோம். வருகின்ற சமுதாயத்திற்கு நீரை பற்ற விழிப்புணர்வை கொடுப்போம்.

—    பேராசிரியர்  அருள் சா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.