உலகத் தன்முனைக் கவிதைகள் நாள்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

டிசம்பர் 17 — ஓர் இலக்கிய முன்னெடுப்பின் தொடக்கம்!  தமிழின் தனித்துவத்தை உலகறியச் செய்யும் இலக்கியத் திருநாள்!

தன்முனைக் கவிதைகளின் தந்தை, கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம் ஐயா அவர்களின் பிறந்தநாளான டிசம்பர் 17ஆம் தேதியை, ‘உலகத் தன்முனைக் கவிதைகள் நாள்’ என அறிவித்து, உலகெங்கும் ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் இம்முன்னெடுப்பை தன்முனைக் கவிதைகளின் அமைப்பின் செயல் தலைவர் கவிஞர் ந . வேலாயுதம் அவர்கள்    அறிவித்து செயல்படுத்தியுள்ளார் .

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

எதிர்வரும் டிசம்பர் 17 ஆம் நாள்  கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம் ஐயா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்படும் தன்முனைக் கவிதைப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் கவிஞர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் தன்முனைக் கவிதைகள் குழுமத்தின் 2027ஆம் ஆண்டு விழாவில் வழங்கப்படும்.

இக்கவிதை வடிவத்தை உருவாக்கி, வளர்த்தெடுத்து, கவிஞர்களை ஒருங்கிணைத்து, எண்ணற்ற புதிய படைப்பாளர்களை ஊக்குவித்து வரும் கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம் ஐயா அவர்களின் இலக்கியப் பங்களிப்பைப் போற்றுவதும், தன்முனைக் கவிதைகளின் தனித்துவத்தையும் இலக்கிய மதிப்பையும் உலகெங்கும் கொண்டு சேர்ப்பதுமே இம்முன்னெடுப்பின் முதன்மை நோக்கமாகும் எனவும் செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார் .

உலகத்தன்முனை நாளினை அறிமுகம் செய்து தன்முனைக் கவிதைகளின் தந்தை முனைவர் கா . ந . கல்யாணசுந்தரம் அவர்களுக்கு  பெருமை சேர்க்கும் தன்முனை கவிதை இலக்கிய உலகுக்கு அங்குசம் வார இதழ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது .

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.