உலகத் தன்முனைக் கவிதைகள் நாள்!

டிசம்பர் 17 — ஓர் இலக்கிய முன்னெடுப்பின் தொடக்கம்!  தமிழின் தனித்துவத்தை உலகறியச் செய்யும் இலக்கியத் திருநாள்!

தன்முனைக் கவிதைகளின் தந்தை, கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம் பிறந்தநாளான டிசம்பர் 17ஆம் தேதியை, ‘உலகத் தன்முனைக் கவிதைகள் நாள்’ என அறிவித்து, உலகெங்கும் ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் இம்முன்னெடுப்பை தன்முனைக் கவிதைகளின் அமைப்பின் செயல் தலைவர் கவிஞர் ந . வேலாயுதம்  முன்னெடுத்து வருகிறார்.

“தன்முனைக் கவிதைகள் வடிவத்தை உருவாக்கி, வளர்த்தெடுத்து, கவிஞர்களை ஒருங்கிணைத்து, எண்ணற்ற புதிய படைப்பாளர்களை ஊக்குவித்து வரும் கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம் அவர்களின் இலக்கியப் பங்களிப்பைப் போற்றுவதும், தன்முனைக் கவிதைகளின் தனித்துவத்தையும் இலக்கிய மதிப்பையும் உலகெங்கும் கொண்டு சேர்ப்பதுமே இம்முன்னெடுப்பின் முதன்மை நோக்கம்” என்கிறார், கவிஞர் ந . வேலாயுதம்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.